Charitable sector executives, Co-op Dept. analyst for selection, free training class
பெரம்பலூர மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு குழுமம் மூலமாக அறநிலைத்துறையில் செயல் அலுவலர் நிலை-III , IV -ல் 65 பணிகாலியிடங்களும் மற்றும் கூட்டுறவு துறையில் 30 பணிக்காலியிடங்களும் நிரப்ப தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான எழுத்துத் தேர்விற்கான தேதி 27.01.2019 மற்றும் 17.02.2019 என தெரிவிக்கப்படுள்ளது.
இந்தத் தேர்விற்கு விண்ணப்பம் செய்பவர்கள் பயனடையும் வகையில் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் வரும் 05.12.2018 தேதியிலிருந்து வாரந்தோறும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10.30 முதல் மதியம் 01.30 மணி வரை இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பயிற்சியின் போது இலவசமாக பாடக்குறிப்புகளும், முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்களும் வழங்கப்படும். மாதிரித் தேர்வுகளும் அவ்வப்போது நடத்தப்பட உள்ளது.
இத்தேர்விற்கு விண்ணப்பித்து இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், தங்களது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, தேர்வுக்கு விண்ணப்பம் செய்த விண்ணப்ப நகல், ஆகியவற்றுடன் 05.12.2018 அன்று புதன்கிழமை காலை 10.00 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், என தெரிவித்த்துள்ளார்.