Charity organizations fast demanding action against those selling liquor without permission near Perambalur!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தேனூர் கிராமத்தில், அனுமதியின்றி மதுபுட்டிகளை விற்பனை செய்யும் தேனூரை சேர்ந்த ஒருவரும், தொட்டியப்பட்டியை சேர்ந்த ஒருவரும், தொடர்ந்து ஈடுபட்டு வருவததாகவும், அதனை தடுக்க வலியுறுத்தி அந்த ஊரில் உள்ள பயிர் தொண்டு நிறுவனத்தினர் உண்ணாவிரதப் போராட்டம், டாக்டர் பிரித்தி தலைமையில், திரளானனோர் பதாகைகளுடன் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உண்ணாவிரதம் செய்தவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தன் பேரில் கலைந்து சென்றனர். இதனால், அங்கு சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது,

இதே போன்று திம்மூர் மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டரிடம் நேரில் முறையிட்டனர். ஆனால், அரசின் மதுபான வகைகள் தாராளமாக கள்ளச் சந்தையில் கிடைதது வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பார்கள் மற்றும் மதுப்புட்டிகளை விற்பனையை அரசியல் கட்சி பிரமுகர்களே செய்து வருவதால், போலீசார் செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!