Charity workers arrested for collecting fees for Prime Minister’s insurance scheme: Police investigation!
பிரதம மந்திரியின் ஆயுஸ்மான் பாரத் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம் பற்றியும், ஜன் ஆரோக்கிய யோஜனா காப்பீடு திட்டம் பற்றியும் பொது மக்களுக்கு இலவச விழிப்புணர்வு முகாம் நடத்துவதாக கூறி சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் தொண்டு நிறுவனம் பெரம்பலூர் மாவட்ட திட்ட இயக்குனர் அலுவலகத்தில் அனுமதி பெற்று விட்டு,0 வேப்பந்தட்டை ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் முகாம் நடத்தி பொதுமக்களிடம் தலா நூறு ரூபாய் வசூல் செய்தனர்.
இது குறித்த ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி கலியமூர்த்தி முகாம் நடந்த இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் வசூல் செய்த, பெரம்பலூர் மாவட்டம் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த கோபால் மகன் ராஜேஷ்சிடம் மத்திய அரசின் திட்டங்களை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்யவதற்குத்தான் உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பணம் வசூல் செய்யக் கூடாது. எனவே பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை திருப்பி கொடுத்து விடுங்கள் எனக் கூறியுள்ளார். ஆனால், பொதுமக்களிடம் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க மறுத்து அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக மோசடியில் ஈடுபட்ட தனியார் தொண்டு நிறுவன செயலாளர் சென்னை சேர்ந்த ஷோக்கத் அலி, பணியாளர் ராஜேஷ் மற்றும் அவருடன் பணியில் இருந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் மீது ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி கலியமூர்த்தி அரும்பாவூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரையடுத்து பொதுமக்களிடம் பணம் வசூல் செய்த 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.