Cheque case: AmmK city secretary jailed for one year Perambalur court verdict!

காசோலை மோசடி வழக்கில் அமமுக நகர செயலருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து, பெரம்பலூர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

பெரம்பலூர் சங்குப்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் முத்துசாமி (வயது 60). திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் மகன் ராஜேந்திரன் (வயது 50). அமமுக நகர செயலாளர். இருவருக்கும் ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் பணம் கொடுக்கல், வாங்கல் இருந்ததாகவும், இந்நிலையில், ராஜேந்திரன் கடந்த ஆண்டு தொழில்ரீதியாக ரூ. 5 லட்சம் பணத்தை முத்துசாமியிடம் பெற்றதாகவும், பின்னர் பணத்தை திருப்பி கேட்டபோது முத்துசாமிக்கு ரூ. 5 லட்சத்துக்கு மூன்று காசோலைகளாக வழங்கியதாகவும்,
இதையடுத்து, அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது ராஜேந்திரனின் கணக்கில் தொகை இல்லாததால் திரும்பி வந்துவிட்டதால், ராஜேந்திரனிடம் கொடுத்த பணத்தை திரும்பி தருமாறு முத்துசாமி பலமுறை கேட்டதற்கு, அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.
இது சமபந்தமாக, கடந்த ஜன. 28 ஆம் தேதி பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் முத்துசாமி வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி அசோக்பிரசாத், பணத்தை ஏமாற்றி காசோலை மோடியில் ஈடுபட்ட அமமுக நகர செயலர் ராஜேந்திரனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 5 லட்சம் ரொக்கம் மற்றும் அபராத தொகையாக ரூ. 5 லட்சம் என ரூ. 10 லட்சத்தை நீதிமன்றத்தில் உடனடியாக செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில், கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் இன்று உத்தரவிட்டார். இதனையடுத்து, ராஜேந்திரனை கைது செய்த போலீஸார் திருச்சி மத்திய சிறைச் சாலையில் அடைத்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!