Chidambaram Constituency AIADMK candidate Chandrakasan collecting votes in Alathur area!
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம், புதுக்குறிச்சியில் நேற்று காலை பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர். கிராமம் கிராமமாக சென்று இரட்டை இலைக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்களை சந்தித்து அதிமுக ஆட்சியின் போது கொண்டு வந்த பல்வேறு திட் டங்களையும் செய்த சாதனைகளையும் எடுத்து கூறி வாக்குகளை சேகரித்தார்.
மேலும், சிதம்பரம் பாராளு மன்ற தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து அரசு திட்டங்களையும் கொண்டு வர மக்களுக்காக அயராது பாடுபடுவேன் என்றும் தன்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னாள் அமைச்சர்கள் ஜெயபால் அருணாச்சலம் அரியலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொரடாவுமான தாமரை ராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் இளம்பை தமிழ்ச்செல்வன், முன்னாள் எம்பி சந்திரகாசி, ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கர்ணன், குரும்பாபாளையம் சி.நாகராஜன், விஜிஎம் @ வெங்கடாசலம் உள்ளிட்ட அதிமுக தேமுதிக மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தெரணி, காரை மலைப்பாநகர், வரகுபாடி, சிறுகன்பூர், நத்தகாடு, தெற்கு மாதவி, சாத்தனூர், சா.குடிகாடு, இலுப்பைகுடி, கூடலூர், கொளக்காநத்தம், அயினாபுரம், அணைப்பாடி, கொளத்தூர், அருணகிரிமங்கலம், மாக்காய்குளம், திம்மூர், சில்லக்குடி, மேத்தால், காரைப்பாடி, ரசுலாபுரம், ராமலிங்கபுரம், ஜமீன் ஆத்தூர், பாலம்பாடி, உள்பட பல கிராமங்களில் பிரச்சாரம் நடந்தது. ஆங்காங்கே வேட்பாளர் சந்திரகாசனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.