Chidambaram MP Constituency BJP candidate Karthiyaini collects votes in Perambalur District!
சிதம்பரம் எம்.பி தேர்தலில் பாஜக வேட்பாளராக கார்த்தியாயினி தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இன்று பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் இன்று வாக்கு சேகரித்தார். காரை – மலையப்ப நகரில் வாக்கு சேகரிப்பை தொடங்கிய அவர் வரகுப்பாடி, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பிலிமிசை, ஆதனூர், மேலமாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக ஆட்சியின் சாதனை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்தார். கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.
பாமக மாவட்ட செயலாளர் செந்தில்குமார், அமமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், தாமகவை சேர்ந்த காரை சுப்பிரமணியன், ஐஜேகே, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி மாநில, மாவட்ட, ஒன்றிய பேரூர், மற்றும் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் காரை மலையப்பநகரை சேர்ந்த சிவக்குமார் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
வாக்கு சேகரிக்க சென்ற பிஜேபி வேட்பாளர் கார்த்தியாயினிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.