Chief Minister J. Jayalalithaa perfect to heal, v.kalathur Dharmapurisvarar special ritual in the temple
பெரம்பலூர் அருகே உள்ள வி.களத்தூரில் தர்மபுரீஸ்வரர் கோவிலில் தமிழக முதல்வர் பூரண குணமடைய வேண்டி சிறப்பு யாக பூஜை அ.தி.மு.க வினர் சார்பில் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் தர்மபுரீஸ்வரர் கோவிலில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி வேப்பந்தட்டை ஒன்றிய அ.தி.மு.க வினர் சார்பில் சிவாச்சரியார்களை கொண்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.
அப்போது விக்னேஷ்வர பூஜை, மஹா சங்கல்பம் கலச ஆவாஹனம் அர்ச்சனை, ருத்ர பாராயணம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அய்யங்கர ம்ருத்யுஞ்ஜெய ஹோமம், 108 மூலிகைகளால் தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் மற்றும் பூர்ணாஹீதி மஹாதீபாராதணைகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் குன்னம் எம்.எல்ஏவும், அ.தி.மு.க மாவட்ட செயலாளருமான ஆர்.டி. இராமச்சந்திரன், பெரம்பலூர் எம்.பி மருதைராஜா, எம்.எல்.ஏ தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், மாவட்ட அவைத் தலைவர் துரை, மாவட்ட இணை செயலாளர் ராணி, ஒன்றிய துணை செயலாளர், பெரியம்மாள்நீலன், வி.களத்தூர் ஊராட்சி கழக செயலாளர் காவியா ரவி, மாவட்ட கவுன்சிலர் செல்வராணி ராயமுத்து மற்றும் திரளான அ.தி.மு.க வினர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து தர்மபுரீஸ்வரருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது.