Chief Minister Jayalalithaa’s died in all over Perambalur district deep in grief
பெரம்பலூர்: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார் என்ற தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதால் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் ஆங்காங்கே முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்வலி செலுத்தி வருகின்றனர். எவருடைய தூண்டுதல் இல்லாமல் அனைத்து வணிக நிறுவனங்கள், சிறு, குறு கடைகள், தேனீர் விடுதிகள், உணவகங்கள், மருத்தகங்கள், உள்ளிட்ட அனைத்து கடைகளும் பூட்டப்பட்டது.
பால் எவ்வித தடையுமின்றி வினியோகம் செய்யப்பட்டது. போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
பேருந்துகள் அனைத்தும் பாதுகாப்பு கருதி பணிமனைக்குள் நிறுத்தி வைக்க்பட்டுள்ளன. எவ்வித அசம்பாவிதங்கள் நடக்காத வகையில் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களில் அரைக்கம்பத்தில் தேசிய கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.