Chief Minister M.K.Stalin’s 70th birthday public meetings! Perambalur District Secretary C. Rajendran announcement!
பெரம்பலூர் மாவட்டத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் நடைபெறுவது குறித்து
மாவட்ட செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
வரும் மார்ச். 14. வேப்பந்தட்டை (மேற்கு) ஒன்றியத்தில், தலைமை கழக பேச்சாளர் குத்தாலம் கல்யாணம், மார்ச். 15 அன்று, பெரம்பலூர் ஒன்றியத்தில், கொள்கை பரப்பு இணைச்செயலாளர் புதுக்கோட்டை விஜயா, மார்ச் 16 இன்று வேப்பூர் வடக்கு ஒன்றியத்தில், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச்செயலாளர்.வி.பி.இராஜன், மார்ச்.21 ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்தில், தலைமை கழக பேச்சாளர் கந்திலி கரிகாலன், மார்ச். 23 அன்று ஆலத்தூர் கிழக்கு ஒன்றியத்தில், தலைமை கழக பேச்சாளர் தமிழ்க்கொண்டான், மார்ச். 24 அன்று, வேப்பூர் தெற்கு ஒன்றியத்தில், தலைமை கழக பேச்சாளர். வரகூர்.காமராஜ், மார்ச். 27 அன்று வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்தில், தலைமை கழக பேச்சாளர்கள் தமிழன் பிரசன்னா, எழும்பூர். கோபி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.
இந்த கூட்டங்களில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர், மாநில, மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். அந்தந்த ஒன்றிய,நகர,பேரூர் கழகச் செயலாளர்கள் இந்த கூட்டங்களை சிறப்பாக நடத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.