Chief Minister M.K.Stal’s 70th Birthday: State Engineer Team, on behalf of Perambalur District Volleyball Association, Rs. 3 lakh worth of sports equipment was provided.
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாநில பொறியாளர் அணி மற்றும் பெரம்பலூர் மாவட்ட வாலிபால் அசோசியேசன் சார்பில், 50 அணிகளுக்கு, ரூ. 3 லட்சம் மதிப்புள்ள வாலிபால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் இரா.ப. பரமேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட வாலிபால் அசோசியேசன் செயலாளர் சே.அதியமான் வரவேற்றார். பெரம்பலூர் மாவட்டசெயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு , பெரம்பலூர் வட்டத்திற்கு- 15 அணிக்கும், வேப்பந்தட்டை வட்டத்திற்கு -11 அணிக்கும், குன்னம் வட்டத்திற்கு – 17 அணிக்கும், ஆலத்தூர் வட்டத்திற்கு-7 அணிக்கும் என மாவட்டம் முழுவதும், வாலிபால் கம்பம் , 100, வாலிபால் நெட்- 50, வாலிபால் 100 என மொத்தம் 50 வாலிபால் அணிக்கு ரூ.3லட்சம் மதிப்புள்ள வாலிபால் உபகரணங்களை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மாநில ஆதிதிராவிடர் நல குழு துணை செயலாளர் பா. துரைசாமி, மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் செ.வல்லபன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வி.எஸ்.பெரியசமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டுச்செல்வி ராஜேந்திரன், கி.முகுந்தன், என். ஜெகதீஸ்வரன், எஸ். அண்ணாதுரை, அழகு. நீலமேகம், மாவட்ட அவைத் தலைவர் அ.நடராஜன், மாவட்ட துணை செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ. ரவிச்சந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் என். கிருஷ்ணமூர்த்தி, எம். ராஜ்குமார், எஸ், நல்லதம்பி, வீ.ஜெகதீசன், சோமு. மதியழகன், தி.மதியழகன், சி. ராஜேந்திரன், வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம், லெப்பைக்குடிக்காடு பேரூர் கழக செயலாளர் ஏ .எஸ். ஜாகிர் உசேன், பூலாம்பாடி பேரூர் கழக செயலாளர் செல்வலட்சுமி சேகர், அரும்பாவூர் பேரூர் கழக செயலாளர் ஆர். ரவிச்சந்திரன், குரும்பலூர் பேரூர் கழக செயலாளர் மு. வெங்கடேசன்,
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், மாவட்ட பள்ளிக்கல்வித் துறை உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன்,சேலம் மாவட்ட வாலிபால் அசோசியேசன் செயலாளர் சண்முகவேல், அரியலூர் மாவட்ட வாலிபால் அசோசியேசன் செயலாளர் வில்லாளன், மாவட்ட இலக்கிய பேரவை அமைப்பாளர் கவிஞர்.முத்தரசன், வாலிபால் அசோசியேசன் புரவலர் மருத்துவர் செ.செங்குட்டுவன், வாலிபால் அசோசியேசன் பொருளாளர் என். செல்லப்பிள்ளை, மாவட்ட வாலிபால் அசோசியேசன் துணைத் தலைவர்கள் வழக்கறிஞர் ப. செந்தில்நாதன், பொறியாளர் சிவராஜ், க.அஸ்வின், மாவட்ட வாலிபால் அசோசியேசன் துணை செயலாளர்கள் வி.எஸ்.தமிழ்செல்வன், கே. செல்வராஜ், ஆர்.செல்வம், கே.எஸ்.செந்தில்குமார், ஜி. என்.பி. ஒஜீர்,ஆர். வேணுகோபால், ஏ.டி. செந்தில்குமார், துரை. காமராஜ், கே.நல்லுசாமி, எஸ்.அழகுவேல், மாவட்ட வாலிபால் அசோசியேசன் இணை செயலாளர்கள் பி. கோபி, எம்.பார்த்திபன், கே. பாபு, வி .சத்யசீலன், ஏ .நல்லுசாமி எம். முருகவேல், என்.செல்வம், எம். பாலாஜி ,நிர்வாக உறுப்பினர்கள் ஆர். பால்ராஜ் ,எம் .சாந்தி ,ஆர். விக்டோரியா, ஆர்.கிருபாமேரி, கே மகாராஜன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சு.தங்கராசு, மாவட்ட அறங்காவலர் குழு துணை தலைவர் பீல்வாடி ராமச்சந்திரன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், தொ.மு.ச.மாவட்ட கவுண்சில் செயலாளர் ஆர்.ரெங்கசாமி, மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் உறுப்பினர் எஸ்.செல்வக்குமார,மாவட்ட தொண்டர் அணி தலைவர் க.ரமேஷ், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.இராசா, துணை அமைப்பாளரகள் முனைவர் மூர்த்தி, பி.எஸ்.வேல்முருகன், கே.பெரியசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் தம்பை.தர்மராஜ்,அரனாரை ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் பெரம்பலூர் மாவட்ட வாலிபால் அசோசியேசன் துணைத் தலைவரும் -பெரம்பலூர் நகராட்சி துணைத் தலைவருமன து.ஹரிபாஸ்கர் நன்றி கூறினார்.