Chief Minister’s Breakfast Program: Minister Sivashankar Launches it in Perambalur!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த மே- மாதம் 7ஆம் தேதி சட்டப் பேரவை விதி எண்- 110 ன் கீழ் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் இயங்கும் சத்துணவுத் திட்டத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 – 5ம் வகுப்பு வரை பயிலும் அரசுத் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அறிவிக்கப்பட்டு நேற்று மதுரையில் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.

பெரம்பலூர் முத்துநகர் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி பொது மையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பள்ளி வளாகத்தில், பெரம்பலூர் நகராட்சி நிர்வாகத்தால் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் 111.15 சதுரமீட்டரில், மேம்படுத்தப்பட்ட பொது சமையலறை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இந்தத்திட்டம், முதல் கட்டமாக 3 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் 112 மாணவ, மாணவியருக்கும் எவர்சில்வர் தட்டு மற்றும் டம்ளர் ஒரு செட் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக பெரம்பலூர் முத்துநகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பொது சமையலறையில் இருந்து 3 பள்ளிகளுக்கும் பிரத்தியேக வாகனத்தில் தினமும் காலை 8.00 மணிக்கு உணவு கொண்டு சென்று வழங்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் முத்துநகர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா, பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் திட்டத்தைத் தொடங்கி வைத்து குழந்தைகளுடன் ஒன்றாக தரையில் அமைர்ந்து உணவருந்தினார். உடனே மற்ற 2 பள்ளிகளுக்கும் பிரத்தியேக வாகனத்தில் காலை உணவு அனுப்பிவைக்கப்பட்டது.

நிகழ்ச்சியின் போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் குன்னம் சி.இராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏக்கள் ம.ராஜ்குமார், பா. துரைசாமி தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், டி.ஆர்.ஓ. அங்கையற்கண்ணி, மாவட்ட திட்ட இயக்குநர் லலிதா, ஆர்.டி.ஓ. நிறைமதி, பெரம்பலூர் நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவர் து.ஹரிபாஸ்கர், யூனியன் சேர்மன்கள் ஆலத்தூர் கிருஷ்ணமூர்த்தி, மீனா அண்ணாதுரை, க.ராமலிங்கம், பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், ஒன்றிய கழக செயலாளர்கள் தி.மதியழகன், சி.ரஜேந்திரன், நகராட்சி கவுன்சிலர்கள் துரை.காமராஜ், ரகமத்துல்லா, சித்தார்த், நல்லுசாமி, ஜெயசித்ரா மணிவாசகம், சித்ரா சிவக்குமார் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!