Chief Minister’s order; 12 people were arrested overnight for attacking BJP workers in Perambalur quari tender issue!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் கல்குவாரி டெண்டர் ஒப்பந்தப்புள்ளி கோருவதற்காக சென்ற போது, கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவரும், பாஜகவின் தொழில்துறை பிரிவு துணைத் தலைவருமான கலைச்செல்வன், மாவட்டத் தலைவர் முருகேசன், உள்ளிட்ட மூவர் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ரவுடி கும்பலால் தாக்குதலுக்குள்ளாகினர்.
இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி.கே. பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில்,
இந்த சம்பவம் தொடர்பாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் தனி உதவியாளர் மகேந்திரன், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரனின் ஆதரவாளர் பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் மீது பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை எவ்வித பாரபட்சமும் இன்றி உடனடியாக கைது செய்ய முதல்வர் மு. க.ஸ்டாலின், பெரம்பலூர் மாவட்ட எஸ்பி.,ஷ்யாம்ளாதேவிக்கு அறிவுறுத்தியதின் பேரில், பெரம்பலூர் மாவட்ட போலீசார் இரவோடு இரவாக 13 பேரை அதிரடியாக கைது செய்தனர்
கைது செய்யப்பட்டவர்கள் விவரம்: பெரம்பலூர் மாவட்டம், ஒகளூர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், ஒகளூர் திமுக ஒன்றிய கவுன்சிலர் கலையரசியின் கணவர் கொடியரசன், கைப்பெரம்பலூர் கிராமத்தை சேர்ந்த அன்புச்செல்வன், அத்தியூர் கிராமத்தை சேர்ந்த லெனின், புதுவேட்டக்குடி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி,
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இரும்புலிக்குறிச்சியை சேர்ந்த தர்மராஜ், செந்துறை அருகே உள்ள சேடக்குடிக்காடு செல்வம்,செந்துறை அருகே உள்ள நொச்சிக்குளம் கிராமத்தை சேர்ந்த கருணாநிதி, செந்துறை அருகே உள்ள சேடக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த இளங்கண்ணன் செந்துறையை சேர்ந்த மாரிமுத்து ஆகியோர் உட்பட 13 பேரை பெரம்பலூர் மாவட்ட போலீசார் கைது செய்து ஆயுதப் படையின் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.