Chief Minister’s program with people: Resolution of petitions: Minister Sivashankar provided Rs 2.20 crore welfare assistance in Perambalur!

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு கண்டு, பயனாளிகளுக்கு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். பெரம்பலூர் ஜே.கே.மஹாலில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதை, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் பயனாளிகளுடன் அமர்ந்து கண்டுகளித்தார்.

இந்நிகழ்வில் பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், பெரம்பலூர் திமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 18.12.2023 முதல் 21.12.2023 வரை நகராட்சி பகுதிகளுக்கும், 27.12.2023 முதல் 30.12.2023 வரை பேரூராட்சி பகுதிகளுக்கும் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் பெறப்பட்ட பல்வேறு துறைசார்ந்த கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு 1,320 பயனாளிகளுக்கு பல்வேறு அரசுத்துறைகளின் திட்டங்களின் மூலம் ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் மூலம் உதவித்தொகை உள்ளிட்ட பல திட்டங்களின் மூலம் 735 பயனாளிகளுக்கு ரூ.83,52,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மின்சார வாரியத்தின் மூலம் 169 பயனாளிகளுக்கு புதிய மின் இணைப்பு உள்ளிட்ட சேவைகளும், ரூ.1.75லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், கூட்டுறவுத்துறையின் மூலம் 7 பயனாளிகளுக்கு ரூ.5.26 லட்சம் மதிப்பிலான பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடனுதவிகளும், குறு-சிறு நடுத்தர தொழில் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ. 89,07,204 மதிப்பலான சுயதொழில் தொடங்க கடனுதவிகளும், 203 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை, 14 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13.45லட்சம் மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் என பல்வேறு அரசுத்தறைகளின் மூலம் 1,320 பயனாளிகளுக்கு பல்வேறு அரசுத்துறைகளின் திட்டங்களின் மூலம் ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்பட்டது.

இதில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் என்.ராஜேந்திரன், நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், யூனியன் சேர்மன்கள் ஆலத்தூர் ந.கிருஷ்ணமூர்த்தி பெரம்பலூர் மீனா அண்ணாத்துரை, வேப்பந்தட்டை இராமலிங்கம் , வேப்பூர் பிரபா செல்லப்பிள்ளை, துணைத் தலைவர் சாந்தாதேவி குமார், பேரூராட்சித் தலைவர்கள் அரும்பாவூர் வள்ளியம்மை, துணைத் தலைவர் சரண்யா, குரும்பலூர் சங்கீதா ரமேஷ், பூலாம்பாடி பாக்கியலட்சுமி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் வல்லபன், நல்லதம்பி, ஜெகதீசன், ராஜேந்திரன், மதியழகன், நகராட்சி துணை தலைவர் ஹரிபாஸ்கர், ஒப்பந்ததாரர் தழுதாழை சி. பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள், நகராட்சி கவுன்சிலர்கள், பூலாம்பாடி திமுக நகர செயலாளர் செல்வலட்சுமி சேகர், உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தாசில்தார்கள் வேப்பந்தட்டை மாய கிருஷ்ணன், பெரம்பலூர் சரவணன், அரும்பாவூர் பேரூராட்சி செயல் அலுவலர் தியாகராஜன், திமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் கொளத்தூர் டி.ஆர். சிவசங்கர், ஆதிதிராவிடர் நலக் குழு பொறுப்பாளர் சன்.சம்பத் உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தூங்கி வழிந்த சார் – ஆட்சியர்
பெரம்பலூர் சார் ஆட்சியராக பணிபுரிந்து வருபவர் கோகுல் பார்வையற்ற மாற்றுத் திறனாளியான அவர் நிகழ்ச்சியில் தூங்கி தூங்கி வழிந்து கொண்டிருந்தார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!