Children crawling on bikes in Perambalur in competition with Pullingos, motorists who are afraid of entering the alleys!
பெரம்பலூர் நகரில் புள்ளிங்கோளுக்கு இணையாக பைக்குகளில் சாகசம் காட்டும் சிறுவர்களால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர்.
பள்ளி விடுமுறை தற்போது விடப்பட்டுள்ளதால் 10 – 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மொபட் முதல் ஆர்.எக்ஸ் வரையிலான மோட்டார் சைக்கிள்களை எடுத்து கொண்டு சாலையில் வலம் வருவதால் போக்குவரத்து விதிகள் காணமல் போய்வருகிறது.
சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை எவரும் தட்டிக் கேட்க முன்வராததாலும், புகார் கொடுத்தால் பெற்றோர்கள் சிரமப்படுவார்கள் என போலீசாரும் பல பெற்றோர்களுக்கு புத்திமதி கொடுத்தும் சிறுவர்கள் – சிறுமிகள் வாகனம் ஓட்டுவது குறைந்த பாடலில்லை.
எனவே, இன்று காலை சிறுவர்கள் மொபட்டில் சாலை கடக்க முயன்ற சிறுவர்கள் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 18 வயதிற்குட்ட சிறுவர்கள் ஓட்டி வரும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்வதோடு, திருப்பி அளிக்காமல் ஏலம் விடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூரில் ஆர்.எக்ஸ் 100 பைக்கை அனயசமாக ஓட்டிச் செல்லும் சிறுவனை படத்தில் காணலாம். இதே பல சிறுவர்கள் பைக்குகளில் பெரம்பலூர் நகர சாலையில் ஓட்டி விபத்துகளையும் ஏற்படுத்தி உள்ளனர்.