Children’s birth certificates can be obtained in government hospitals; Namakkal Collector informs

Model


நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளிலேயே பிறப்பு சான்றிதழை பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பிறப்பு, இறப்புப் பதிவு பணிகளைக் கண்காணிக்கும் வகையில் நாமக்கல் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் ஆசியா மரியம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியதாவது:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும் 2008ம் ஆண்டு முதல் பிறப்பு, இறப்புப் பதிவு மையங்களாக அறிவிக்கப்பட்டு சுகாதார ஆய்வாளர்கள் பிறப்பு, இறப்பு பதிவாளர்களாகச் செயல்பட்டு வருகின்றனர். இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்பத்திரியிலிருந்து விடுவிக்கும் முன்னர் இலவசமாக பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

இதுபோலவே அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகள், அரசு பெண்கள்- குழந்தைகள் நல ஆஸ்பத்திரிகள் கடந்த ஆண்டு முதல் பிறப்பு இறப்பு மையங்களாக அறிவிக்கப் பட்டு சம்மந்தப்பட்ட நகராட்சி,பேரூராட்சி,மாநகராட்சியில் உள்ள துப்புரவு ஆய்வாளர்கள் செயல் அலுவலர்களை பிறப்பு இறப்புப் பதிவாளர்களாகக் கொண்டு செயல்பட்டு பல்வேறு பணி காரணமாக அரசு ஆஸ்பத்திரிகளில் பிறப்பு, இறப்பு பதிவு மையம் செயல்படாமல் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலகங்களிலேயே இருந்து வந்தது.

அதனால் பெண்கள் ஆஸ்பத்திரியிலிருந்து விடுவிக்கும் முன்னர் இலவசமாக வழங்கப்படவேண்டிய பிறப்புச் சான்றிதழ்கள் முறையாக வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தன. இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்டு வந்த சிரமத்தை களையும் வகையில் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிகள், அரசு ஆஸ்பத்திரிகள், அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரிகளுக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறையில் பணியாற்றும் பல்நோக்கு சுகாதார மேற்பார்வையாளர்கள்(ஆண்) பிறப்பு, இறப்பு பதிவாளர்களாக நியமனம் செய்யப்பட்டு அரசு ஆணை வெளியிடபட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 9 அரசு ஆஸ்பத்திரிகளுக்கும் பிறப்பு, இறப்பு பதிவாளர்கள் நியமிக்கப்பட்டு பிறப்பு, இறப்பு பதிவு மற்றும் சான்றிதழ் வழங்கும் பணிகள் கடந்த அக்டோபர் மாத்திலிருந்து நடைபெற்று வருகிறது. எனவே கடந்த ஜனவரி மாதத்திலிருந்து அரசு ஆஸ்பத்திரிகளில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு, இறப்புகளுக்கு அந்தந்த அரசு ஆஸ்பத்திரிகளிலேயே சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்.

இங்கு பதிவுகள் உரிய காலத்தில் செய்தவற்கு ஏதுவாக கர்ப்பிணி பதிவு எண், தாய், தந்தை பெயர், ஆதார் எண், முகவரி போன்ற சரியான விவரங்களை பிரசவத்திற்கு வரும்பொழுதே உடன் எடுத்து வர வேண்டும். மேலும் பிறப்பு, இறப்பு பதிவு தொடர்பான கட்டணங்ளை சம்மந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளர்கள் வசம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் இந்த சேவையை பயன்படுத்தி ஆஸ்பத்திரியிலிருந்து செல்லும் முன் இலவச சான்று பெற்றுக்கொள்ளலாம். மேலும் குழந்தைகளுக்கு பெயர் வைத்தவுடன் பிறப்பு பதிவேட்டில் குழந்தையின் பெயர் பதிவு செய்து பெயருடன் கூடிய பிறப்பு சான்று பெறலாம் என பேசினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!