Chinnaru lake Desilting canal at a cost of Rs.15 lakh: Perambalur collector started!


பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், சின்னாறு ஏரியில் சின்னாறு அணைக்கட்டு முதல் சின்னாறு ஏரி வரை உள்ள சுமார் 4 கி.மீ வரத்து வாய்க்கால் ரூ.15 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படவுள்ள தூர்வாரும் பணியை கலெக்டர் கற்பகம், எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
சின்னாறு ஏரியானது சென்னை தேசிய நெடுஞ்சாலை பெரம்பலூரில் இருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கோனேரி ஆற்றில் அமைந்துள்ள சின்னாறு அணைக்கட்டு மூலம் சின்னாறு ஏரிக்கு தண்ணீர் வருகிறது. சின்னாறு ஏரியானது 195 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஏரியின் அதிகபட்ச நீர்மட்டம் 96.620 மீ ஆகும். 72 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு திறன் கொண்டது. இதன்மூலம் 716 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக தூர் வாரப்படாமலும், முட்புதர்கள் மண்டியும், வரத்துக்கால் முழுவதும் மண் மேடிட்டு தூர்ந்து உள்ளதால் ஏரிக்கு தண்ணீர் முழுமையாக வர முடியாமல் அருகில் உள்ள பாசன நிலங்களில் நீர் தேங்கி சாகுபடி பயிர்களுக்கும் மற்றும் விளை நிலங்களை சேதப்படுத்தியுள்ளது.
இதனை சரி செய்வதற்காக ரூ.15 லட்சம் செலவில் சின்னாறு அணைக்கட்டு முதல் சின்னாறு ஏறி வரை உள்ள சுமார் 4 கி.மீ தொலைவிற்கு வரத்து வாய்க்கால் முழுவதையும் தூர்வாரி ஏரிக்கரையினை பலப்படுத்தி, ஏரிப் பகுதியிலுள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி, கொள்ளளவை அதிகரித்து நீர் கொண்டு செல்வதற்கும், நீர் தேக்கி வைக்கும் அளவிற்கும் தூர்வாரும் பணிகள் நடைபெறவுள்ளது. இந்த பணிகள் 30.06.2023க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வேப்பந்தட்டை யூனியன் சேர்மன் க.ராமலிங்கம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் மகாதேவிஜெயபால், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!