Christians today is the beginning of Lent: Easter Festival April 16th

model photo


கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று துவங்குவதையொட்டி ஆலயங்களில் இன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்படுகிறது.

ஏசுவின் சிலுவைபாடுகளை நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் 40நாட்கள் உபவாசம் இருப்பர்.தவக்காலம் என அழைக்கப்படும்.

இக்காலங்களில் மாமிசம் உள்ளிட்ட உணவுவகைகள் சாப்பிடுவதை தவிர்த்து தங்களை வருத்திகொள்வர். ஒருவேளை உணவு மட்டுமே உண்பது என சூழ்நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை வகுத்துக்கொள்வார்கள்.

தானதர்மம் செய்வது,ஏழைகளுக்கு உணவு அளிப்பது போன்ற சடங்குகளை கடைபிடிக்கின்றனர். திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவது இல்லை.

தவக்காலத்தில் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தவக்காலத்தின் துவக்கநாளான சாம்பல் புதன்கிழமை இன்று (1-ம்தேதி) முதல் அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடக்கிறது. கத்தோலிக்க ஆலயங்களில் கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறன்று பிடிக்கப்பட்ட ஓலைகளில் இருந்து சாம்பல் எடுத்து அதனை பாதிரியார்கள் அனைவரது நெற்றியிலும் பூசுவார்கள்.

ஆலயங்களில் சிலுவைபாடு குறித்து தியானங்கள் நடைபெறும். ஏப்ரல்14-ம்தேதி அன்று இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனிதவெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ஏப்ரல் 16‍ம் தேதி அன்று இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!