Cinema ticket price reduction in Namakkal district following the GST tax cut by the central government; Fans are happy

மத்திய அரசு ஜிஎஸ்டி வரியைக் குறைத்துள்ளால் நாமக்கல் மாவட்டத்தில் சினிமா தியேட்டர்களில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மத்திய அரசு ஜன.1ம் தேதி முதல் சினிமா டிக்கட்டுகளுக்கான ஜிஎஸ்டிவரியை குறைத்துள்ளது. இதையொட்டி ரூ.100க்கு அதிகமான சினிமா டிக்கட்டுகளுக்கு 28 சதவீதமாக இருந்து ஜிஎஸ்டி வரி தற்போது 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.100க்கு குறைவான சினிமா டிக்கட்டுகளுக்கான வரி 18 சதவீதத்திலிருந்த 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் சங்க மாநில செயலாளர் எம்எம்ஆர் மோகனரங்கம் கூறியாதவது:

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் தாலுக்காவில் 8 தியேட்டர்களும், திருச்செங்கோடு தாலுக்காவில் 16 தியேட்டர்களும், ராசிபுரம் தாலுக்காவில் 5 தியேட்டர்களும், பரமத்திவேலூர் தாலுக்காவில் 4 தியேட்டர்களும் என மொத்தம் 33 சினிமா தியேட்டர்கள் உள்ளன.

இவை மல்டி பிளக்ஸ், ஏசி வசதி கொண்டவை, ஏசி வசதி இல்லாதவை என 3 பிரிவுகளில் உள்ளன. ஏசி வசதி இல்லாத தியேட்டர்களில் கட்டணம் ரூ.30 முதல் 60 வரையிலும், ஏசி வசதி கொண்ட தியேட்டர்களில் ரூ.50 முதல் 100 வரையிலும், மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் ரூ.50 முதல் 150 வரையிலும் டிக்கட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இத்துடன் தமிழக அரசின் 8 சதவீத கேளிக்கை வரி, தியேட்டர் பராமரிப்புக் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வரி சேர்த்து வசூலிக்கப்பட்டு வந்தது.

தற்போது மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்க வந்துள்ளதால் வரியுடன் சேர்த்து ரூ.75க்கு விற்பனை செய்யப்பட்ட டிக்கட் தற்போது ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.135க்கு விற்பனை செய்யப்பட்ட டிக்கட் தற்போது ரூ.125க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.215க்கு விற்பனை செய்யப்பட்ட டிக்கட்டுகள் ரூ.195க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் டிக்கட் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். சினிமா டிக்கட் கட்டணத்திற்கான ஜிஎஸ்டி வரி குறைப்பை முன்னிட்டு டிக்கட் விலை குறைக்கப்பட்டதால் நாமக்கல் மாவட்ட சினிமா ரசிர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!