Citizenship Amendment Seminar at Perambalur, on behalf of the Jananayaga Mather Sangam.

அனைத்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சார்பில் பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள அலுவலகத்தில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு கருத்தரங்கம் நடத்தினர். மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் எ.கலையரசி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஆர்.வசந்தா, மாவட்ட செயலாளர் பி.பத்மாவதி, மாவட்ட தலைவர் எஸ்.பாக்கியம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைச் செயலாளர் எஸ்.கீதா சிறப்புரையாற்றினார். இந்தியா மதசார்பற்ற நாடாக பிறந்து 70 ஆண்டுகள் கடந்து முடிந்த நிலையில் அரசியல் சாசன சட்டத்தை பிளவுபடுத்த மோடி அரசு கொண்டு வந்ததுதான் குடியுரிமை திருத்த சட்டம். இதை அசாம் மாநிலத்தில் செயல்படுத்தியதில் 19 லட்சம் பேர் குடியுரிமை இல்லாதவர்கள் என்றும் அதில் 7லட்சம் பேர் இஸ்லாமியர்கள் என தகவல்கள் தெரிவித்துள்ளன. இதை பல மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என்று அரசாங்கமே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள் குறிப்பாக கேரளா பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மக்கள் கணக்கொடுப்பு எடுக்க மாட்டோம் என்று கூறிவரும் நிலையில் தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் முதல் மக்கள்தொகை கணககெடுக்கும் பணி தொடங்கப்படும் என்று அரசாணை வெளியிட்டு அதோடு குடியுரிமை சட்டத்தின்கீழ் உள்ள கணக்கெடுக்கும் பணிக்கு 22 கேள்விக்குரிய படிவங்களும் தயார் செய்து வருகின்றனர். எனவே, இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாதர்சங்கங்கள் உள்ள பகுதிகள் முழுவதும் மாநாடு மற்றும் கருத்தரங்கம் மூலம் மக்களிடம் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு குறித்த விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்தார். பெண்களுக்கான சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் இரா.ஸ்டாலின் மாதர்சங்க நிர்வாகிகளின் விவாதங்களுக்கு விளக்கமளித்தார். மாதர் சங்க நிர்வாகிகள் எஸ்.மலர்கொடி, தனலட்சுமி, ஜெ.மேரி, எம்.மகேஸ்வரி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!