CITU Electrical Employees Union demonstrates in Perambalur

மின்ஊழர்களின் உரிமைகளையும் வாழ்வாரத்தையும் சீரழிக்கும் மின்வாரியத்தை கண்டித்து பெரம்பலூரில் சிஐடியு மின்ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொழிலாளர்கள், அலுவலர்கள், பொறியாளர்களுக்கு சேர வேண்டிய பணப்பயன்களை காலம் தாழ்த்தும் மின்வாரியத்தை கண்டித்து இன்று மாநிலம் தழுவிய ஆh;ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் நான்குரோடு மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சிஐடிய மின்ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிஐடியு மாநில செயலாளர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பி.நாராயணன், எஸ்.காசிநாதன், ஆர்.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் எம்.பன்னீர்செல்வம் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். மின்வாரிய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு சி.இராஜகுமாரி வாழ்த்துரை வழங்கினார்.

தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியில் முன்பணம் கோருபவர்களுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும், மறுசீரமைப்பு என்ற பெயரில் பொதுத்துறையான மின்துறையை சிறுசிறு துண்டுகளாக்கி தனியாரிடம் ஒப்படைத்து 90 ஆயிரம் ஓய்வூதியர்கள் மற்றும் 80 ஆயிரம் ஊழியர்களின் வாழ்வாதாரம் உள்பட மின்நுகர்வோர்களையும் சீரழிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!