CITU protest in Perambalur demanding cancellation of contract and outsourcing system in government and private companies!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று காலை, சிஐடியூ -வை சேர்ந்தவர்கள் மாவட்டத் தலைவர் ரெங்கநாதன் தலைமையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் அகஸ்டின், மாவட்ட பெருளாளர் ரெங்கராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் சிவானந்தம், கருணாநிதி, மற்றும் மாவட்டக் குழுவை சேர்ந்த பன்னீர்செல்வம், கிருஷ்ணசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில்,

மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு தினக்கூலி வழங்கி, நிரந்தரப்படுத்தி, குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000 நிர்ணயம் செய்ய வேண்டும், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை, தனியார் ஆலைகளில் உற்பத்தி பகுதிகளில் ஒப்பந்த முறை மற்றும் அவுட்சோர்சிங் முறை புகுத்துவதை கைவிடவேண்டும், உள்ளாட்சி துறையில் அவுட்சோர்சிங் புகுத்த பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணைகள் 115, 139, 152 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்,

மின்சாரம்,போக்குவரத்து, அரசு கேபிள் டிவி, அரசு மருத்துவமனை, நகராட்சி, வடிகால் வாரியம், ரயில்வே ஆகிய துறைகளில் கான்ட்ராக்ட் முறையை ரத்து செய்து, முறைசாரா தொழிலாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து பணப் பயன்களையும் நிபந்தனையின்றி வழங்கிட வேண்டும், என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!