CITU unions protest in Perambalur demanding various things!

பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஜீன் 1ஆம் தேதி முதல் 10 ஆம் வரை அகில இந்திய அளவில பிரச்சாரம் நடைபெற்றது. அதனையொட்டி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் சி.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.அகஸ்டின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தடுப்பூசி உற்பத்தியை விரைவுபடுத்தி பொது மக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டும், அனைவருக்கும் இலவச தடுப்பூசியை உறுதி செய்ய வேண்டும், தமிழகத்தில் உள்ள இந்துஸ்தான் பயோடெக் மற்றும் பாஸ்டர் இன்ஸ்டிடியுட் ஆகிய நிறுவனங்களை தடுப்பூசி உற்பத்திக்கு பயன்படுத்தவேண்டும், கோவிட் தீவிரத்தை கட்டுப்படுத்திட போதுமான மருத்துவ படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்ட பிற மருத்துவ வசதிகளை உறுதி செய்திட வேண்டும்.

கார்ப்பரேட் சார்பு தடுப்பூசி கொள்கையை கைவிடவேண்டும், தேவையான சுகாதார பணியாளர்களை நியமித்து பொது சுகாதார உள்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும், ஊரடங்கு காலத்தில் வேலையிழப்பு ஊதியவெட்டு ஆகிய தொழிலாளர் விரோத நடவடிக்களில் ஈடுபடும் நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும், தொழிலாளர் சட்ட தொகுப்புகள், விவசாய சட்டங்கள் மற்றும் மின்சார சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், பொதுத் துறை தனியார்மயம் மற்றும் பங்கு விற்பணையை கைவிட வேண்டும், வருமான வரி வரம்பிற்குள் இல்லாத குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணமாக மாதம் ரூ.7500 வழங்கிட வேண்டும், அடுத்த ஆறு மாதங்களுக்கு அனைவருக்கும் உணவு தானியங்களை இலவசமாக வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. தீண்டாமை ஒழிப்பு முண்ணனி மாவட்ட நிர்வாகி எம்.கருணாநிதி, நிர்வாகிகள் மல்லீஸ்குமார், ரெங்கநாதன், ராஜகுரு, கிளை செயலாளர் தர்மராஜ் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!