Claims of Kunnam MLA R.Ramachandran’s request to announce relief for crops affected by maize

குன்னம் எம்.எல்.ஏ ஆர்.டி.ராமச்சந்திரனின் கோரிக்கையை ஏற்று சட்ட சபையில், அவர் பேசிய 2 மணி நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம் பயிருக்கு நிவராணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தமிழக சட்டசபையில் நேற்று குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன் பேசியதாவது:
பெரம்பலூர் மாவட்டம் விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட விவசாயிகள் நிறைந்த மாவட்டம். அதில் மானாவாரி பயிராக இதுவரை பருத்தி பயிர் செய்து அதற்கு மருந்து அடித்து பல நோய்கள் தாக்குதல் காரணமாக பருத்தி பயிரிடுவதை மாற்றி மக்காசோளத்தை பயிர் செய்கிறார்கள். தற்போது படைபுழு தாக்குதல் காரணமாக அந்த பயிர்களையும் அறுவடை செய்யமுடியாமல் மக்காசோளத்தை இயந்திரன் முலம் தூளாக்கி தை பக்கத்திலிருக்கக்கூடிய ஆந்திரா மாநிலத்திற்கு மாட்டுத்தீவினமான அனுப்புகின்ற அவலநிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
தங்களது படித்த பிள்ளைகளுக்கு பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தங்கள் விளைநிலங்களையெல்லாம் அந்த பகுதியில் இருக்ககூடிய அரசு சிமெண்ட் ஆலை மற்றும் தனியார் சிமென்ம் ஆலைகளுக்கு விற்றுவிட்டு விளைநிலம் இல்லாத விவசாயிகளும் கூட அங்கிருக்ககூடிய அரசு புறம்போக்கு மற்றும் வனத்துறைக்கு சொந்தமான நிலங்களில் வருமானத்தை உயர்த்திகொள்ளும் போராடுகின்ற தமிழகத்தில் தனது வாழ்வாதரத்திற்காக மண்ணையில் விண்ணையும் நம்பியிருக்ககூடிய விவசாயிகள் தமக்கு ஏற்படுகின்ற இழப்பை வருடத்திற்கு ஒரு முறை ஈட்டுகின்ற தனது வருமானத்தை நிச்சயிக்கமுடியாமல் இருக்கிறார்கள். இந்த முறை பருவமழை பொய்த்து விட்டதன் காரணமாக அந்த மக்காச்சோள விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டும்.
குன்னம் தொகுதி, செந்துறையில் சுமார் 5 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பில் முந்திரி பயிர் செய்து முந்திரிப்பயிரையே தனது வாழ்வாதாராமாக கொண்டு அங்குபிழைப்பு நடத்திவரும் செந்துறை ஒன்றிய முந்திரி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒரு நேரடி முந்திரி கொள்முதல் நிலையம் அமைத்து தரவேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்து வேளாண்மை அமைச்சர் துரைக்கண்ணு பேசுகையில், குன்னம் தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரனின் கோரிக்கையினைஏற்று மழையின்மையால் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்காசோள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் செந்துறையில் முந்திரி கொள்முதல் நிலையம் அமைக்க அரசு பரிசீலனை செய்யும் என்றார்.
குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன் கோரிக்கையை ஏற்று அவர் பேசிய 2 மணி நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம் பயிருக்கு நிவராணம் வழங்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
வருவாய்த்துறை அமைச்சர் உதயக்குமார் பேசுகையில், குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன் கோரிக்கையை ஏற்று முதல்வர் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம் பயிருக்கு ஏக்கருக்கு மானாவாரிக்கு 7,500ம், நஞ்சைக்கு ரூ.13,500ம் நிவராணம் வழங்கப்படும் அறிவித்துள்ளார் என்றார்.