Clap hands and farmers struggle in Perambalur

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டங்களின் போது போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், கோரிக்கை வலியுறுத்தும் உழவர் தின கூட்டமும் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் போது, நாராயணசாமி நாயுடுவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த விவசாய சங்க பிரதிநிதிகள், மக்காச்சோளம், பருத்தி, நெல் உள்ளிட்ட
விவசாய விளை பொருட்களை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள விலையை சட்டப்பூர்வமாக்கி அதன்படி விவசாய விளைபொருட்களை வியாபாரிகள் கொள்முதல் செய்ய வேண்டும்.

கொரோனா காலத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விவசாயிகளுக்கு எதிராக செயல்படுத்தப்பட்டுள்ள மின்சார சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட சட்டங்களை மத்திய, மாநில அரசுகள் திரும்பப் பெற வேண்டும்.

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், ஏரிகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி பெறுவதற்கு வட்டாட்சியர் அலுவலகங்களில் நாடுவதால் காலதாமதம் ஏற்படுகிறது இதனை தவிர்க்க, நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் தலைமையில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மாவட்ட தலைவர் மாணிக்கம், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், நீலகண்டன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு, மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கைதட்டி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!