Clash between sons of SSI’s wife in Perambalur: 2 slashed with sickle, admitted to hospital; Police investigation!




பெரம்பலூர் விளாமுத்தூர் சாலையில் உள்ள வாட்டர் டேங்க் அருகில் வசிப்பவர் எஸ்.எஸ்.ஐ. பாண்டியன்(48). பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனில் பணியாற்றி வந்த இவருக்கு ஜெயா(45), மேரி(48), விஜயலட்சுமி(45), என 3 துணைவியர்கள் உள்ளனர்.

ஜெயாவிற்கு, செல்லப்பாண்டி (22) மகனும், மேரிக்கு ஜேம்ஸ் பாண்டியன் (24), பிரவீன்குமார் (22/24) என்ற மகன்களும்,
விஜயலட்சுமிக்கு, பினேகாஸ்(27), ஜோஸ்வா (23) என்ற மகன்களும், எஸ்லியா (19) மகளும் உள்ளனர்.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம், வி. களத்தூர் அரசு பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர்களான தீபா மற்றும் வெங்கடேசன் கடந்த 2023 நவம்பர் மாதம் 15 ஆம் தேதி மாயமாகினர். இந்த வழக்கில், எஸ்.எஸ்.ஐ., பாண்டியன், தனது கவனக்குறைவாக பணியாற்றியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் துறை ரீதியான விசாரணைக்கு பின்னர் எஸ்.எஸ்.ஐ., பாண்டியன் மீண்டும் பணியில் சேர உயர் அதிகாரிகளை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் எஸ்.எஸ்.ஐ., பாண்டியனின் சொந்த ஊரான அரியலூர் அருகே உள்ள வாலாஜா நகரில் தந்தை செல்லமுத்து கடந்த மே.6ஆம் தேதிஉடல் குறைவால் திடீரென உயிரிழந்தார். அவரது இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற 3வது துணைவி விஜயலட்சுமியின் மகன்களை, 2வது துணைவி மேரியின் மகன்கள் ஏன் வந்தீர்கள்? என கேள்வி கேட்டு ரகளையில் ஈடுபட்டதால் இருதரப்புக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த உறவினர்கள் இருதரப்பையும் சமாதானம் செய்து இறுதிச் சடங்கை முடித்து வைத்தனர்.

இதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக நேற்றிரவு சுமார் 11.30 மணி அளவில் பெரம்பலூர் விளாமுத்தூர் சாலையில் உள்ள பாண்டியனின் வீட்டில் ஏற்பட்ட கைகலப்பில், இரண்டாவது துணைவியாரின் மகன்களான ஜேம்ஸ் பாண்டியன், பிரவீன்குமாரும், முதல் துணைவியாரின் மகனான செல்லப்பாண்டிக்கும் வீட்டின் முன் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை அடுத்து நொறுக்கியதோடு மூன்றாவது துணைவியாரின் மகன்களான பினேகாஸ், ஜோஸ்வா ஆகிய இருவரையும் சரமாரியாக தாக்கி அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்று தலைமறைவாகி விட்டனர்.

இந்த சம்பவத்தில் பினேகாஸுக்கு இடது கை மற்றும் தொடையில் வெட்டுக்காயமும், ஜோஸ்வாக்கு இடது மணிக்கட்டு துண்டாகியும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, திருச்சி கே.எம்.சி., மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான ஜேம்ஸ் பாண்டியன், பிரவீன்குமார், செல்லப்பாண்டி ஆகிய மூவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பணியிடை நீக்கத்தில் உள்ள சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் துணைவியார்களின் மகன்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இருவர் அரிவாளால் வெட்டுக்காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரம்பலூர் – அரியலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!