Cleaning staff through THADCO, can join the welfare: Perambalur Collector!

Photo Credit : Perambalur.nic.in
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுகழகம் தாட்கோ மூலம் 2008-ஆம் ஆண்டு முதல் தூய்மை பணிபுரிவோர் நலவாரியம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் தூய்மை பணிபுரிவோர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் நலவாரிய உறுப்பினர்களுக்கானஅடையாளஅட்டை வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து நகாரட்சி, பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அமைப்புசாரா, தூய்மை பணியாளர்களுக்கு தாட்கோவின் மூலமாக தூய்மை பணிப்புரிவோர் நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டு கல்வி உதவி தொகை, திருமண உதவி தொகை மகப்பேறு உதவி தொகை, முதியோர் உதவி தொகை மற்றும் கண் கண்ணாடி வாங்கிட உதவி தொகை போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படவுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமபஞ்சாயத்து அலுவலங்களுக்கு அடையாளஅட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அனுப்பிவைக்கப்பட உள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அமைப்புசாரா, தூய்மை பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தை அணுகி விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர் / உதவி செயற் பொறியாளர் / செயல் அலுவலர் / கிராம நிர்வாக அலுவலர் அவர்களின் கையொப்பத்துடன் மாவட்ட மேலாளர், தாட்கோ பெரம்பலூர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு 04328 – 276317 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட கலெக்டா வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.