Closure of temple near Perambalur: Health department takes action as priest is confirmed corona infected
பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியம்மன் கோவில் பூசாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவில் பூசாரிக்கு தொற்று உறுதியானதை அடுத்து ஸ்ரீ மதுரகாளியம்மன் கோவில் தற்காலிகமாக மூடப்பட்டது. பக்தர்கள் உள்ளிட்ட பொது மக்கள் வெளியில் நின்று ஸ்ரீ மதுரகாளியம்மனை வழிபட்டு செல்கின்றனர். சக பூசாரிகள் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.