CM SPl.Gdp in Perambalur, Veppanthattai , Rs, 11.54 crores Welfare Aid by Minister Vellamandi Nadarajan provided to Beneficiaries


பெரம்பலூர் மாவட்டத்தில் ஆக.22. முதல் 31 வரை அனைத்து பகுதிகளிலும், முதலமைச்சரின் சிறப்பு குறைத்தீர்க்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, பொதுமக்களின் கோரிக்கைகள் மனுவாக பெறப்பட்டது.

பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் ஒன்றியங்களைச் சேர்ந்த 2969 நபர்களுக்கு பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டையில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் ஆர்.தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்), ஆர்.டி.இராமச்சந்திரன் (குன்னம்), கலெக்டர் வே. சாந்தா ஆகியோர் கள் முன்னிலையில் ரூ.11.54 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் வழங்கினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

ஏழை எளிய மக்கள், முதியோர், மாணவ மாணவியர்கள், மகளிர், குழந்தைகள் என நாட்டு மக்களின் நலனிற்காகவும், நாட்டின் நலனிற்காகவும் எண்ணற்ற சிறப்பான திட்டங்களை முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வழியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் மக்களின் குறைகளையும், தேவைகளையும் கண்டறிந்து அவற்றை களையும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழக முதலமைச்சரின சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் மூலமாக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அதற்கு உடனடிய தீர்வு காணவேண்டும் என்று அரசாணை பிறப்பித்தார்கள். அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 177 முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களிடமிருந்து 9,244 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மேலும், இத்திட்டத்தின் மூலம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு 2 மாதத்தில் தீர்வு காணப்படும் என அறிவித்தப்படி, ஒன்றரை மாத காலத்திலேயே தீர்வு காணப்பட்டுள்ளது.

மொத்தம் 2,969 நபர்களுக்கு ரூ.11 கோடியே 54 லட்சத்து 35 ஆயிரத் 055- மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்படுகிறது, என பேசினார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், திட்ட இயக்குநர் தெய்வநாயகி, கோட்டாட்சியர் சுப்பையா, மகளிர் திட்ட இயக்குநர் தேவநாதன், உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், அதிமுகவை சேர்ந்த கட்சி தொண்டர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!