Co-operative Bank and ration shop workers strike for pension || கூட்டுறவு வங்கி,ரேஷன்கடை பணியாளர்கள் வேலைநிறுத்தம்
பெரம்பலூரில் தமிழ்நாடு மாநில தொடக்ககூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு மாநில தொடக்ககூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நியாயவிலைகடைகளில் மாநிலம் முழுவதும் பணியாற்றிவரும் சுமார் 45 ஆயிரம் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் ஆட்சிப் பணியாளர் அலுவலகத்திற்கு முன்பு நடந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்திலுள்ள தொடக்க கூட்டுறவு சங்கம் மற்றும் நியாயவிலைகடை பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள 291 ரேஷன் கடைகள், 53 தொடக்க கூட்டுறவு வங்கிகளை மூடி விட்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் 450 ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் 93 பேர் என 500க்கும மேற்பட்டார் கலந்து கொண்டனர்.