Collecting Votes Without Paying: Support Is Growing! Independent candidate Rengaraj who collected votes in Perambalur city interviewed!
பெரம்பலூர் எம்.பி தொகுதிக்கான தேர்தல் வரும் ஏப்.19 நடக்கிறது. மொத்தம் 23 போட்டியிடுகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த ரெங்கராஜ் (40). மரையன் இன்ஜினியர். சுயேட்சையாக வேட்பாளராக போட்டியிடும் இவர் பெரம்பலூர் நகரில் தனது ஆதரவாளர்களுடன் சூறாவளி சுற்றுப் பிரச்சாரம் செய்து தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கப்பல் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தாவது:
மற்ற கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வாக்குகளை பெற முயலும் நிலையில், ஊழலற்ற நேர்மையான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக பணம் கொடுக்காமல் வாக்கு சேகரிக்கும் எனக்கு, 6 சட்ட மன்ற தொகுதிகளிலும், பொதுமக்கள் பெரும் ஆதரவுடன் வரவேற்பு அளித்து வருகின்றனர். கட்சிகளிடம் பணம் வாங்கி வாக்களித்து ஏமாந்து மக்களின் விரக்தி எங்கள் பக்கம் திரும்பி கொண்டிருக்கிறது, வெற்றிப் பாதை மிக அருகில் இருக்கிறது என தெரிவித்தார்.
பின்னர், பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் வாக்களார்களிடையே பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசியதாவது:
காவிரி நீரானது லாடபுரம் ஏரியில் நிரப்பப்பட்டு அதை சுற்றியுள்ள 13 ஏரிகள் பயன்பெறும் வகையில் வழிவகை செய்யப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் குடிநீர் சேவையை அறிந்து தினசரி குடிநீர் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்படும்.
பெரம்பலூர் பாராளுமன்றத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவர வழிவகை செய்யப்படும். நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்காக முசிறி அருகே காவேரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படும்
.பெரம்பலூர் பாராளுமன்றத்திற்கு உட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகள் கொண்டுவர் வழிவகை செய்யப்படும். சின்னவெங்காயம், பருத்தி, நெல, கோரை மற்றும் இதர பொருட்களின் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும்.
பெரம்பலூர் பாராளுமன்றத்திற்கு உட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் குளிர்சாதன கிடங்கு அமைக்கப்படும். விவசாய பொருட்களின் ஏற்றுமதிக்கான விதிமுறைகள் எளிதாக்கப்படும்.
பால் உற்பத்தியை அதிகப்படுத்தி விலை நிர்ணயம் செய்து ஏற்றுமதிக்கு வழிவகை செய்யப்படும்.
பெரம்பலூர், துறையூர், நாமக்கல் ரயில் தடம் அமைப்பதற்காக சரங்கப்பாதைகள் அமைத்து, சுரங்கப்பாதை அமைப்பதற்காக தோண்டி எடுக்கப்பட்ட கனிம வளங்களை கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்த வழிவகை செய்யப்படும்.
வாழை கொள்முதல் மற்றும் ஏற்றுமதிக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு மேலும் ஏற்றுமதிக்கான வழிவகை செய்யப்படும்.
அரசு சார்ந்த வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்படும்.
பெரம்பலூர் பாராளுமன்றத்திற்கு உட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் தகவல் தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்பட்டு, உள்ளூர் வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்படும்.
அழிந்து வரும் வனம் சார்ந்த காடுகள் சீரமைக்கப்பட்டு மேம்படுத்தப்படும். பெரம்பலூர் நான்கு வழிச்சாலை கொண்டுவர வழிவகை செய்யப்படும்.
50 வருடங்களுக்கு மேலாக இருக்கக்கூடிய தரைப்பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் புதுப்பிக்கப்படும்.
மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றி மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் அனைத்து கிராமங்களுக்கும் சென்றடைய வழிவகை செய்யப்படும்.
சுற்றுலாத் தலங்களான மயிலூத்து அருவி. மலையாளபட்டி நீர்த்தேக்கம், ரஞ்சன்குடி கோட்டை, புளியஞ்சோலை, கொல்லிமலை, பச்சமலை ஆகிய சுற்றுலாத்தலங்கள் மேம்படுத்தப்படும்.
பெரம்பலூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சிகளிலும் மாணல், மாணவியர்களுக்கான விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும்.
முசிறி பகுதியில் அதிகம் உற்பத்தியாக கூடிய கோரைப்பாயின் ஏற்றுமதியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் எளிமையாக்கப்பட்டு ஏற்றுமதிக்கு வழிவகை செய்யப்படும். அனைத்து
பெரம்பலூர் நாடாளுமன்றத்திற்குட்பட்ட பள்ளிகளிலும் (Skill Devlopment) திறன் மேம்பாடு வகுப்புகள் கட்டாயமாக்கப்படும். பெரம்பலூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சிகளிலும் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை இலவச மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற வழிவகை செய்யப்படும்.
மலைவாழ் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு மேலும் இலவச அவசர கால ஊர்தி வழங்க வழிவகை செய்யப்படும். பெரம்பலூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம பஞ்சாயத்துகளில் தேவைக்கு ஏற்ப பேருந்து வசதி ஏற்பாடு செய்ய வழிவகை செய்யப்படும்.
பெரம்பலூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட நகராட்சி,பேரூராட்சிகளில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களும் சீரமைக்கப்பட்டு நவீன பேருந்து நிலையமாக மேம்படுத்த வழிவகை செய்யப்படும். கிராமப்புற இடுகாடுகளுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும். அவசர ஊர்திகளின் எண்ணிக்கை அதிகரித்து மக்களின் பயன்பாட்டிற்கு செயல்படுத்தப்படும்.
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட EL சரண்டர் திரும்ப கிடைக்க ஆவனம் செய்யப்படும். ரயில்வே துறையில் நிறுத்தி வைக்கப்பட்ட அறிவிப்பை திரும்ப கிடைக்க ஆவணம் செய்யப்படும். உலகத் தரத்தில் கப்பல் கட்டும் துறையில் இந்தியர்களை பயன்படுத்தி, பொருளாதார வளர்ச்சிப்பாதையில் நமது நாடு முதலிடம் வகிக்க ஆவணம் செய்யப்படும் என தெரிவித்தார்.
தனது கோரிக்கைகள் அடங்கிய பிரசுரத்தை வழங்கி பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவரது ஆதரவாளாகள் மற்றும் அனைத்து நாயுடு சமூகத்தை சேர்ந்த சங்கங்களை சேர்ந்தவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்தனர்.