Collection of cab tax without issuing tender; Roadside traders protest to Perambalur municipal commissioner for investigation!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், இன்று காலை, பெரம்பலூர் நகராட்சி ஆணையாளரை கண்டித்தும், பெரம்பலூர் நகராட்சியில் டெண்டர் விடாமலேயே வண்டிப்பேட்டை வரி வசூல் வேட்டை நடத்தி வருவதாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது எப்படி டெண்டர் விட்டார்கள் என்பதையும், முறைகேட்டில் ஈடுபட்டுள்ள பெரம்பலூர் நகராட்சி ஆணையர் ராமரை சஸ்பெண்ட் செய்து, முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும், முன்னறிவிப்பின்றி சாலை வியாபார வியாபாரிகள் மீது பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஈடுபடுவதாகவும், விளக்கம் கேட்டாலும் தொடர்பு கொண்டாலோ முறையாக நகராட்சியில் பதில் அளிப்பதில்லை என்றும் , நகராட்சியில் வீட்டு மனை மற்றும் அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு வரி வசூலிப்பு தொகைகள் எவ்வளவு அது எங்கே சென்றுள்ளது என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

மேலும் புதிய பேருந்து நிலையத்தில் புதிதாக கடைகளை கட்டுவதற்கும் இருக்கும் ஆர்வம் கழிவறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை பயணிகளுக்கு செய்து கொடுப்பதில் இல்லை என்றும், நகராட்சி முழுவதும் அனைத்து வார்டுகளிலும் வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு போதுமான கழிப்பறை வசதி இல்லை என்றும், அதனால் திறந்த வெளியிலேயே ஆங்காங்கே ஆண்கள் சிறுநீர் கழித்து செல்கின்றனர். பெண்கள் பெரும் சிரமம் அடைகின்றனர்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் ஆணையாளர் பெரம்பலூரில் வளர்ச்சிக்கு பாடுபடாமல் அவர்களுடைய வளர்ச்சிக்கு மட்டுமே பாடுபடுவதாகவும், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சாலையோர வியாபாரிகளிடம் அளவுக்கு அதிகமாக பெரம்பலூர் நகராட்சியில் வசூலிக்கப்படும் வண்டிப்பேட்டை வரி வசூலை முறைப்படுத்தவும், வெண்டர் கமிட்டியை உடனே கூட்டக் கோரியும் புதிய பேருந்து நிலையத்தில் சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனை தொழிலாளர்கள் சங்கத்தின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கம்யூனிஸ்ட் மற்றும் சிஐடியு சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!