Collection of information on the profile of Putrai Vannar people of Perambalur District: Collector Information!
தமிழகத்தில் முன்னோடி முயற்சியாக புதிரை வண்ணார் சமூக மக்களின் கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் புதிரை வண்ணார் இனமக்களின் விவரத்தினை கணக்கெடுப்பு செய்ய சென்னை இப்சோஸ் என்ற ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சென்னை ஆதிதிராவிடர் நலத்துறையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்நிறுவனத்தின் கணக்கெடுப்புக்குழு ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று தகவல்களை சேகரிக்க உள்ளது.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் புதிரை வண்ணார் இன மக்கள் நலத்திட்ட உதவிகள் பெற பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தினை அனுகி பயன்பெறலாம் என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்