பெரம்பலுாரில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒன்றாம் வகுப்பு அட்மிஷனுக்கு 25 ஆயிரம் ரூபாய் பணம் வசூல் செய்யப்படுவதாகவும், பள்ளியின் தரம் மற்றும் முதல்வரின் முறைகேடுகள் குறித்தும் வாட்ஸ்அப்பில் பரபரப்பான இரண்டு ஆடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விபரம் வருமாறு:
பி.டி.ஏ (ரமேஷ்பாண்டியன்) : சார் வணக்கம் சார் கே.வி., ஸ்கூல் இருந்து பி.டி.ஏ., பேசுறேன் சார்
பயனாளி ராஜா: சார் சொல்லுங்க சார்
பி.டி.ஏ : சார் ஒன்னும்மில்லைங்க சார் லேண்ட் விசயமா பணம் கேட்டிருந்தோம்ல சார்
பயனாளி: எப்படீங்க சார்
பி.டிஏ : சார் லேண்டுக்கு எல்லாம் சப்போட் பன்னிருக்ககாங்க சார்
பயனாளி: லேப்பா
பி.டி.ஏ : லேன்ட் லேன்ட் சார் புது பில்டிங்குக்கு லேன்ட் வாங்கியிருக்கோம்ல சார்
பயனாளி: ஆமாம் சார்
பி.டி.ஏ., பேரன்ஸ் சைடுல இருந்து எல்லாருமே 25 தவுசன் கொடுத்து எல்லாமே புல்லாவே கொடுத்து சப்போட் பன்னிருக்காங்க சார்
பயனாளி: சரி
பி.டி.ஏ: போன வருசம் சாயின்ட் பன்னிருந்தவங்கல வான்ட்டடு லிஸ்ட்ல நீங்க இருக்கீங்க
பயனாளி: எப்படீங்க சார் ஆன்வெல்டேவா
பி.டி.ஏ: வான்டேடு கொடுக்காதவங்க லிஸ்ட்ல ஒங்க பேர் இருந்தது
பயனாளி: இல்ல சார் கொடுத்துட்டேன் சார் 25யும்
பி.டி.ஏ: யாரு கிட்ட சார் கொடுத்துட்டீங்க
பயனாளி: அட்மிஷன் ஆகுறப்பவே கொடுத்துட்டேன் சார்
பி.டி.ஏ: கைக்கு வரல சார்
பயனாளி: பிரி்ன்ஸ்பாலிடம் தான் கொடுத்தேன் அட்மிஷன் ஆகுறப்பவே கொடுத்துட்டேன், பி.டி.ஏ., பிரசிடன்டிடமும் சொல்லிவிட்டனேன்.
பி.டி.ஏ: ரசீது வாங்கீட்டீங்களா
பயனாளி: இல்லீங்க சார்
பி.டி.ஏ: சரிங்க சார் நீங்க கொடுத்தேன்னு மட்டும் சொல்லுங்க சார் எனக்கு போன் பன்றாங்க
பயனாளி: நான் பிரிசன்பல்தான் கட்டினே 25 தவுசனும் கட்டிட்டிட்டுத்தான் அட்மிஷனே போட்டேன்
பி.டி.ஏ: ஒன்னும் இல்லீ்ங்க சார் வான்ட்டடு லிஸ்ட்ல உங்க பேரும் இருந்துச்சி அதான் போன் பன்னிவேன்.
இதைத்தொடர்ந்து குமணன் என்பவர் பயனாளியிடம் தொடர்ந்து பேசுகிறார். அதில் எஸ்.சி., சீட்டை எ.டி., சீட்டாக மாற்றம் செய்து வழங்குவதற்காக பிரின்ஸ்பால் 25 ஆயிரம் பெற்றுக்கொண்டதாக பயனாளி தெரிவிக்கிறார். இப்படியாக பேச்சு தொடர்கிறது. பயனாளி பெயர் ராஜா என்றும் வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் ஆசிரியராக இருப்பதாகவும், அவர் தனது மகன் தீணேஷ் அட்மிஷனுக்காக 25 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும் தெரிவிக்கிறார். அடுத்த ஆடியோவில் பெற்றோர் ஒருவரிடம் பி.டி.ஏ., உறுப்பினர் ஒருவர் இது குறித்து விசாரிப்பதும், பள்ளியின் முதல்வரின் முறைகேடுகள், பள்ளியின் தரம் குறித்தும் இருவரும் கலந்துரையாடும் உரையாடல் ஆடியோ உள்ளது.
வாட்ஸ்அப்பில் வெளியாகி உள்ள இந்த இரண்டு ஆடியோக்களால் பெரம்பலுார் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.