Collector consultation meeting with bank managers in Perambalur on election expenditure monitoring

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021யை முன்னிட்டு தேர்தல் செலவின கண்காணிப்பு தொடர்பாக வங்கி மேலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டரும், தேர்தல் அலுவலருடான வெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், வங்கிகளின் தொகை எடுத்துச் செல்லும் வெளி கொள்முதல் முறையிலான முகவரமைப்புகள், நிறுவனங்கள், தொகைக் கொண்டு செல்லும் வேன்களில் வங்கியின் தொகைத் தவிர ஏனைய யாதொரு மூன்றாம் தரப்பு முகவரமைப்புகள், நிறுவனங்களின் தொகையை கொண்டுச் செல்லவில்லை என்பதை வங்கி உறுதி செய்யவேண்டும்.

மேலும், இது தொடர்பாக வங்கிகளின் பணத்தினை ஏ.டி.எம், பிறகிளைகள், வங்கிகள் போன்ற இடங்களுக்கு எடுத்துச்செல்லும் போது அவற்றிற்கான தகுந்த கடிதங்கள் மற்றும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். தொகை எடுத்துச் செல்லும் வேனில் பயணம் செய்யும் பணியாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட தகுந்த அடையாள அட்டையினை வைத்திருக்க வேண்டும். ஆய்வு செய்யும்போது, அந்தமுகமை, நிறுவனங்கள் தக்க ஆவணங்களை அளிக்க தயாராக இருக்க வேண்டும். தொகைக் குறித்து நேரடி ஆய்வின்போது ,அந்த பணமானது வங்கிகளின் ஏ.டி.எம்மில் தொகை வைப்பதற்கு அல்லது பிறகிளைகளுக்கு அல்லது வங்கியின் உத்தரவின் மேல்பணம் வைப்பறைக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதற்கான இரசீதினையும் வைத்திருக்க வேண்டும்.

மேலும், சந்தேகத்திற்கிடமான பண நடவடிக்கைகளை கண்காணித்தல் தொடர்பாக, தேர்தல் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, பணம் எடுப்பது அல்லது வைப்பது போன்ற நிகழ்வுகள் நடைபெறாத போது தேர்தல் நடைமுறையின் போது ஒரு வங்கிக் கணக்கில் ரூ.1 இலட்சத்திற்கு மேல் அசாதாரணமான மற்றும் சந்தேகத்திற்குரிய முறையில் பணம் எடுப்பது அல்லது வைப்பது. இதற்கு முந்தைய தேர்தல் நடைமுறையின் போது, அம்மாதிரி நிகழ்வுகள் நடைபெறாத போது, அசாதாரணமாக ஆர்.டி.ஜி.எஸ் மூலம் ஒரு வங்கி கணக்கிலிருந்து மாவட்டம் மற்றும் தொகுதியிலிருக்கும் பல நபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு தொகை மாற்று செய்வது. மேலும் வேட்பாளர்கள் அல்லது அவரது வாழ்க்கைத் துணைவர் அல்லது அவரை சார்ந்திருப்பவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ.1 இலட்சத்திற்கு மேல்வைப்பது அல்லது எடுப்பது.

தேர்தல் நடைமுறையின்போது அரசியல்கட்சியின் கணக்கிலிருந்து ரூ.1 இலட்சத்திற்கு மேல் ஏதேனும் பணம் எடுப்பது அல்லது பணம் வைப்பீடு செய்வது. வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்காகப் பயன்படும் ஏனைய யாதொரு சந்தேகத்திற்கிடமான பணக் கொடுக்கல் வாங்கல்கள். ஆகிய நடவடிக்கைகளைக் கண்காணித்து தினசரி அறிக்கை அளிக்குமாறும் அனைத்து வங்கி மேலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வருமானவரித்துறை, வருவாய் மற்றுத் தேர்தல், வங்கி மேலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!