Collector, female passengers tormented for not removing liquor store in favor of Alcoholic!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வரும் பெண்கள், குடிமகன்களின் அட்டகாசத்தால், நாளுக்கு நாள் அவதிப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து இது குறித்து ஊடகங்களிலும், செய்தித்தாள்களிலும் பொதுமக்கள் பலமுறை முறையிட்டும், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகிறார். வசதியுள்ளவர்கள் அல்லாமல், அனைத்து தரப்பினரும் பொதுப் போக்குவரத்தான பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் பெண்களும் அடக்கம். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்னை, விழுப்புரம், வேலூர், திருப்பதி, கடலூர், அரியலூர், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள, மதுக்கடையால், பேருந்தில் வரும் வெளியூர் பயணிகள், பேருந்து நிலையத்தில் உள்ள கடையில் மது வாங்கி குடித்து விட்டு, பேருந்து நிலையத்தில், கண்டப்படி ஆங்காங்கே, அரை நிர்வாணத்துடன் கிடக்கின்றனர். சில குடிமகன்கள் கண், மண் தெரியாமல் குடித்து எழுந்து நிற்க கூட முடியால், போதை தெளியும் வரை படுத்து உறங்குகின்றனர். பலர் போதையில் உருளுவதோடு உளருவும், ஆபாசமாகவும் தனக்குத்தானே பேசி திட்டுகின்றனர். பிற சில குடிமகன்கள், பெண்களை நோக்கி தகாத வார்த்தைகளால் அழைப்பதும், அவர்களிடம் தகாத முறையில் திட்டுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், சில குடிமகன்கள், பெண்கள் வேலை செய்யும் கடை முன்பும், நடைபாதையின் குறுக்கே படுத்து கொண்டும் போதையில் அட்டகாசம் செய்கின்றனர். இதை யாரும் தட்டி கேட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இது குறித்து அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை. இதனால், பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும், பெண்கள், அதிகாரிகள், மாணவிகள், சொந்த ஊருக்கு செல்ல குடிமகன்களை பெரும் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஒரு பெரிய மாவட்டம் அல்ல! ஒரு ஆர்.டி.ஓ (RDO) நிர்வகிக்க கூடிய மாவட்டம், இதற்கு கூடுதலாக ஒரு டி.ஆர்.ஓ, ஒரு கலெக்டர் என பணி செய்கின்றனர். இவர்கள் அப்படி என்ன பணி செய்கின்றனர் என பெண் பயணிகள், வேதனை தெரிவிக்கின்றனர். பெண்களுக்கு பெண்ணே பாதுகாப்பு அளிக்க வில்லை என்றால் யார்தான் பாதுகாப்பு அளிப்பார்கள் என்று மனம் நொந்து செல்கின்றனர். பல சமூக ஆர்வலர்கள், பெண் பயணிகள், பேருந்து நிலைய கடைகளில் பணிபுரியம் பெண் பணியாளர்கள் பல முறை கலெக்டர் எண்ணான 9444175000 -ல் தகவல் தெரிவிக்க முயன்றாலும், அழைப்பதை ஏற்பதும் இல்லை. திரும்ப அழைப்பதும் இல்லை. இதனால் மாவட்ட மக்கள் வேதனை அடைந்துள்ளனர். கலெக்டரை அரசியல்வாதிகள், அதிகாரிகள் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் நிலையில், அரசுக்கு வரிசெலுத்தும் சதாரண குடிமகன்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது.

இதற்கு எல்லாம் மனு கொடுத்தால் நடவடிக்கை எடுப்பார்கள் என்றால், அதிகாரிகளின் வீடு தீப்பற்றி எரிந்தால், மனு எழுதி வாங்கி கொண்டுத்தான் தீயை அணைப்பார்களா, அல்லது, அவர்கள் மனு கொடுத்த பின்தான் மாதமாதம் சம்பளம் பெறுகிறார்களா, என பொதுமக்கள் வெகுண்டு எழுகின்றனர். அதிகாரிகள் வீட்டு பெண்கள் யாராவது அவதிபட்டால், இப்படித்தான் கண்டு கொள்ளாமல் இருப்பார்களா எனவும், கேள்வி எழுப்புகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்திற்கு மீண்டும், மக்களோடு மக்களாக பழகும் தரேஸ் அஹமது போல மீண்டும் ஒரு நல்ல கலெக்டர் வருவாரா பொதுமக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். முதலமைச்சர் முக.ஸ்டாலின் பெரம்பலூருக்கு மக்கள் நலனில் அக்கறை கொண்ட மாவட்ட கலெக்டரை தரவேண்டும், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மதுக்கடையை அகற்றி பெண்களுக்கு அச்சத்தை போக்கி, பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!