Collector issued orders to the allottees in the Tamil Nadu Housing Board flats.

பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையத்தில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஒதுக்கீட்டிற்கான ஆணையினை கலெக்டர் வெங்கடபிரியா வழங்கினார்.

கவுள்பாளையம் கிராமம், துறைமங்கலம் திட்ட பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 19,682.25சதுர மீட்டர் பரப்பளவில் 504 அடுக்குமாடி வீடுகள் ரூ.41.02 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. வீடு இல்லாதவர்களுக்கும், புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பவர்களுக்கும் சொந்தமாக வீடு வழங்கும் பொருட்டு பயனாளிகள் பங்களிப்புடன் மத்திய,மாநில அரசுகளின் நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ரூ.8.14 இலட்சம் மதிப்பீட்டிலான ஒரு குடியிருப்பிற்கு மாநில அரசின் பங்களிப்பாக ரூ.5.00 இலட்சமும், மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.1.50 இலட்சமும் பயனாளிகளின் பங்களிப்பாக ரூ.1.64 இலட்சமும் அடங்கியுள்ளது. 37.165 சதுர மீட்டர் பரப்பளவுள்ள ஒரு குடியிருப்பில் முன்அறை, படுக்கையறை, சமையலறை, கழிவறை, குளியலறை ஆகியன அமைக்கப்பட்டுள்ளன.

அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் வசதி, சிறுவர் பூங்கா, தார் சாலை வசதி, தெரு விளக்குகள், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை சேகரிக்கும் பகுதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதனை பொதுமக்கள் அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். டி.ஆர்.ஓ ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் ச.ஷகீலா பீவி, உதவி பொறியாளர் நவநீத கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!