Collector Santha inspects the field of a farmer who cultivates grapes Organic Method



பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தில் நபார்டு வங்கி பயிற்சியுடன் இயற்கை முறையில் திராட்சை சாகுபடி செய்யும் வயலை கலெக்டர் சாந்தா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

எசனை கிராமத்தில் விவசாயிகளை ஒருங்கிணைத்து விவசாய உற்பத்தி சங்கம் ஏற்படுத்தப்பபட்டுள்ளது. இச்சங்கத்திற்கு 3 வருட காலம் ஒருங்கிணைப்பு ஒப்பந்தம் என்ற அடிப்படையில் 3 மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் நடத்தி தேவையான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. நபார்டு வங்கியின் மூலம் ரூ.12இலட்சம் 100 சதவீதம் மானியத்தில் கடன் உதவி தவணை முறையில் 3 மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்பட்டு வருகிறது.

இதனை முதலீடாக கொண்டு விவசாயம் சார்ந்த வேளாண் இடுபொருட்களை வாங்கி விவசாயிகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்தின் மூலம் இந்நிறுவனம் தொடர்ந்து இயக்கப்படுகிறது.

மேலும், இயற்கை முறையில் விவசாயம் செய்ய விரும்பும் 20 விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் மன்றம் ஏற்படுத்தப்படுகிறது. அவர்களுக்கு இது குறித்து முறையாக 3 நாட்கள் பயிற்சி அளித்து வேளாண் தொழில் செய்ய ஆலோசனை வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் எசனை கிராமத்தில் 30 செண்ட் அளவில் அங்கக (ஆர்காணிக்) முறையில் திராட்சை சாகுபடி செய்யப்பட்டு நல்ல மகசூல் பெறப்பட்டு உள்ளது.

இதனை போன்று வேளாண்மை செய்ய விரும்புவர்களுக்கு இது குறித்து விபரங்கள் எடுத்து கூறி இயற்கைமுறை விவசாயத்தினை ஊக்கப்படுத்திட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சாந்தா அப்போது தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை , நபார்டு வங்கி உள்ளிட்ட அரசு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!