Collector to take action to operate Perambalur Sugar Mill; Federation of Agricultural Unions demand!
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் சங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.வரதராஜன், மற்றும் அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.ராஜேந்திரன் ஆகியோர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கோரியிருப்பதாவது:
சர்க்கரை அலை துவங்கிய நாள் முதல் இன்றைய வரை சர்க்கரை ஆலை சரிவர இயங்கவில்லை. கடந்த ஒரு வாரமாக சர்க்கரை ஆலையின் இயக்கம் மிக மோசமாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களான ஆலை நின்றுவிட்டது. இதனால், சர்க்கரை ஆலையில் உள்ள கரும்பு காய்ந்து எடை குறைவு ஏற்படுகிறது.
டிராக்டர் டிரைவர்கள் வேலை இன்றி, உணவுச் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் வேலையில்லாமல் காத்து கிடக்கின்றனர். வெட்டிய கரும்புகள் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறது, மேலும், அடுத்தடுத்து, விளைந்த கரும்புகளை வெட்டாமல், நிலுலையில் உள்ளதால், விவசாயிகளும் வேதனைக்கு உள்ளாகின்றனர். எனவே, தாங்கள் (கலெக்டர்) உடனடியாக தலையிட்டு சர்க்கரை ஆலையை இயக்குனர் என்ற முறையில் இயக்க நடடிவக்கை வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.