Collector V. Santha planted trees on the school premises in honor of World Environment Day.

ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 05 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு, சூற்றுசூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வனத்துறையின் சார்பில் மரகன்று நடுதல், மரம் நடுவதன் அவசியம் குறித்து மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இன்று பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் காரை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலெக்டர் வே.சாந்தா மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன், வன சரகர் சசிகுமார், வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆலயமணி, திலட்சுமி, காரை ஊராட்சி மன்ற தலைவர் கலையரசன், காரை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!