Collector Venkatapriya released the final voter list of Perambalur district.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெங்கட பிரியா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியட்டார். அப்போது அவர் தெரிவித்தாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் 01.11.2021 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 3,00,795 வாக்காளர்களும், 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2,71,820 வாக்காளர்களும் ஆக மொத்தம் 5,72,615 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

பின்னர் 01.11.2021 முதல் 30.11.2021 வரை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த பணியின் போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களின் அடிப்படையில் 11,618 வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 5,052 ஆண் வாக்காளர்களும், 6,557 பெண் வாக்காளர்களும்; மற்றும் இதரர் 9 வாக்காளர்களும் உள்ளனர். இதில் 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 2,641 ஆண் வாக்காளர்களும்;, 3,360 பெண் வாக்காளர்களும் மற்றும் இதரர் 6 வாக்காளர்களும்,

148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2,411 ஆண் வாக்காளர்களும், 3,197 பெண் மற்றும் இதரர் 3 வாக்காளர்களும் உள்ளனர். இறப்பு, இரட்டை பதிவு மற்றும் இடப்பெயர்ச்சி காரணமாக 1,628 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 610 ஆண் வாக்காளர்களும், 575 பெண் வாக்காளர்களும், 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் 220 ஆண் வாக்காளர்களும், 223 பெண் வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியலின்படி 147.பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்கு சாவடி மையங்களில் மொத்தம் 3,05,617 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1,48,330 வாக்காளர்களும், பெண்கள் 1,57,259 வாக்காளர்களும் மற்றும் இதரர் 28 வாக்காளர்களும் உள்ளனர்.

148.குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 320 வாக்குச்சாவடி மையங்களில் மொத்தம் 2,76,988 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1,36,226 வாக்காளர்களும், பெண்கள் 1,40,746 வாக்காளர்களும் மற்றும் இதரர் 16 வாக்காளர்களும் உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 5,82,605 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 2,84,556 வாக்காளர்களும், பெண்கள் 2,98,005 வாக்காளர்களும் மற்றும் இதரர் 44 வாக்காளர்களும் உள்ளனர்.

இதனை தொடர்ந்து, 05.01.2022 முதல் தொடர் திருத்தப் பணிகள் மெற்கொள்ளபடவுள்ளன. எனவே, வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தத்தின் போது பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ள தவறியவர்கள் 05.01.2022 முதல் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் ஆகிய அலுவலகங்களில் படிவம் 6, 6யு, 7, 8 மற்றும் 8யு அளித்து பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்துகொள்ளலாம் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ. அங்கையற்கண்ணி, சப்-கலெக்டர் நிறைமதி, நகராட்சி ஆணையாளர் குமரிமன்னன், தேர்தல் வட்டாட்சியர் சீனிவாசன், அனைத்து வட்டாட்சியர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!