Collector Venkatapriya visits Perambalur Municipal Garbage Depot

பெரம்பலூர் நகராட்சி துறைமங்கலம் நெடுவாசல் சாலையில் உள்ள உரக்கிடங்கில் பல ஆண்டுகளாக பழைய திடக்கழிவுப் பொருட்கள் சேகரம் செய்யப்பட்டு வந்துள்ளது.

இந்த கழிவுகளை அகற்றி, உயிரி செயலாக்க முறையில் (Bio-Mining) பிளாஸ்டிக் திடக்கழிவுகள் பிரித்தெடுக்கும் பணிகளையும், பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில், தினசரி கழிவு நீர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட நீர் தரம் பரிசோதனை செய்யப்பட்டு வருவதையும், மேலும் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படும் நீர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் மாதம்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட நீர் குறியீட்டு அளவிற்குள் உள்ளதை உறுதி செய்யப்பட்டு வருவதையும், மேலும், நகராட்சியின் மூலம், நாளொன்றுக்கு சேகரிக்கப்படும் 18 மெட்ரிக் டன் மக்கும் மற்றும் மக்காத திடக்கழிவுகள் சேகரம் செய்யப்பட்டு நுண்ணுயிர் உரம் தயாரிப்பதற்காக திடக்கழிவுகள் அனுப்பப்பட்டு நுண் உரம் தயார் செய்யப்பட்டு வரும் பணிகளையும், மக்கும் திடக்கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணிகளையும், நகராட்சி பகுதிகளில் உள்ள காய்கறி மற்றும் உணவு கழிவுகளை சேகரம் செய்து கரிம மீத்தேன் வாயு உற்பத்தி செய்யும் பணிகளையும் கலெக்டர் வெங்கட பிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி ஆணையாளர் ச.குமரிமன்னன், நகராட்சி பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் துப்புரவு ஆய்வர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!