Collector who inspected the quality of drinking water supplied to the houses of Perambalur Municipality

பெரம்பலூர் மாவட்ட நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் குறித்தும், திடக்கழிவு மேலாண்மை செயலாக்கம் குறித்து அன்னை நகர் 7வது வார்டு பகுதி, ரோஸ் நகர் ஆகிய பகுதிகளில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது பொதுமக்களுக்கு குடிநீர் போதுமான அளவிற்கு கிடைக்கிறதா எனவும், குடிநீரின் தரம் குறித்தும் குடிநீர் கலக்கப்படும் குளோரின் அளவு குறித்தும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார். பொதுமக்களிடம் திடக்கழிவு மேலாண்மையை மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை தரம் பிரித்து வாங்கப்படுவதையும், டெங்கு ஒழிப்பு பணிகளையும், கொரோனா வைரஸ் தொற்று நோய்தடுப்பு நடவடிக்கையாக வாகனங்களின் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்படுவதையும் பார;வையிட்டு ஆய்வு செய்தார்.

இது குறித்து கலெக்டர் மேலும் தெரிவித்ததாவது:

மழைக்காலங்களில் டெங்கு கொசு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் மழைநீர் தேங்காமல் பாதுகாத்து, சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் உற்பத்தியாகும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை என தரம் பிரித்து சுகாதார பணியாளர;களிடம் வழங்கிட வேண்டும். பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதை தவிர்த்து சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்திட ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். மழைக்காலம் என்பதால் குடிநீரினை பொதுமக்கள் காய்ச்சி வடிகட்டிய பின்னரே குடிக்க பயன்படுத்திட வேண்டும்.

பொதுமக்களுக்கு விநியோகிக்ப்படும் குடிநீரில் சரியான அளவில் குளோரின் கலந்த குடிநீரை விநியோகிக்க வேண்டும். குளோரின் அளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் 2 பிபிஎம் இருக்க வேண்டும். தெரு (அ) வீட்டுக் குழாய்களில் 0.5 பிபிஎம் இருக்க வேண்டும். வீடுகளில் உள்ள மேல் நீர் தேக்கத்தொட்டி, தரைமட்ட குடிநீர் தொட்டியில் குளோரின் அளவு இருப்பதற்கு பின்வரும் வழி முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். 1000 லிட்டர் தண்ணீருக்கு 33 சதவீதம் குளோரின் உள்ள தரமான பிளிச்சிங் பவுடரை 4 கிராம் வீதம் ஒரு வாளியில் எத்துக் கொண்டு பசைபோல் ஆக்க வேண்டும். வாளியில் முக்கால் பகுதி அளவிற்கு வரும் வரை தண்ணீர் ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.

சுண்ணாம்பு மற்றும் பிற வண்டல் முதலானவை வாளியின் அடிப்பாகத்தில் தங்குவதற்காக 10 முதல் 15 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். பின்னர் தெளிந்த குளோரின் நீரை மற்றொரு வாளியில் ஊற்றி அதை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நன்கு கலக்க வேண்டும். குளோரின் நன்கு கலந்த பின்னர் ஒரு மணிநேரம் கழித்து தண்ணீரை விநியோகிக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று நோய் பராவாமல் தடுத்திட பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் சாலைகளில் கிருமிநாசினி தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் ச.குமரிமண்ணன், நகராட்சி செயற்பொறியாளர் ராதா உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

படவிளக்கம்:

பெரம்பலூர் நகராட்சி சார்பில் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் தரத்தினை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா ஆய்வு செய்த போது எடுத்தப்படம். அருகில் நகராட்சி ஆணையாளர் ச.குமரிமண்ணன், நகராட்சி செயற்பொறியாளர் ராதா உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!