College student killed in the bath in the canal dyke near Namakkal

நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அடுத்த, ஜேடர்பாளையம் தடுப்பணை வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த, பொறியியில் கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி இறந்தார்.
கரூர், வடிவேல் நகரைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி, இவரது மகன் லோகேஷ் (19), இவர் திருச்சி தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வந்தார். இவர், தனது உறவினர்களுடன் சம்பவத்தன்று மதியம் 3 மணியளவில் ப.வேலூர் அடுத்த ஜேடர்பாளையம் தடுப்பணைக்கு பகுதிக்கு சுற்றுலா வந்தார்.
பின்னர், அணையில் இருந்து பிரிந்து செல்லும், ராஜா வாய்க்காலில் லோகேஷ் குளித்துக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கினார். அவரது உறவினர்கள் லோகேஷை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம், ப.வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.