College students’ car overturns near Perambalur; One killed. 4 people were injured
பெரம்பலூர் அருகே உள்ள மங்களமேடு பகுதியில் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் பலியானர், 4 பேர் படுகாயமடைந்தனர்.
திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆண்டிப்பட்டி நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஹரிஷ் (வயது 20), திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கலியமூர்த்தி மகன் ஆகாஷ் ராம் (20) கள்ளக்குறிச்சி சேர்ந்த மனோகரன் மகன் அஸ்வின் (20) இவர்கள் மூவரும் தனியார் மேன்ஷனில் தங்கி படித்து வருகின்றனர் மற்றும் தில்லை நகரைச் சேர்ந்த அட்சய ராஜா(20) புறந்தாகுடியை சேர்ந்த ராஜ்கபூர் மகன் ஆதம்பாரிக் (20) ஆகியோரும் படித்து வருகின்றனர். இவர்கள் ஐந்து பேரும் ஒரு காரில் அஸ்வின் தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவரைப் பார்ப்பதற்கு கள்ளக்குறிச்சிக்கு நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தனர். காரை அஸ்வின் ஓட்டிக்கொண்டு வந்தார்.
கார் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மங்களமேடு காவல் நிலையம் அருகே சென்று கொண்டு இருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக சாலையின் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து தலைகீழாக உருண்டது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆதிம் பாரிக் என்ற மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து தகவலறிந்த மங்களமேடு போலீஸார் காயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.