Coming May 29 on the 30-point demands or it’ll strike
நாமக்கல் : 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29ம் தேதி டாஸ்மாக் பணியாளர்கள் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் மாவட்ட ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சண்முகாம் தலைமை வகித்தார். மாவட்டதலைவர் இளஞ்செழியன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மாநில சிறப்பு தலைவர் பாலகிருஷ்ணன், மாநில செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பணி நிரந்தரம், கால முறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். பணி விதிகள் உருவாக்கப்பட வேண்டும். ஓய்வு பெறும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணிக்கொடை குறைந்த பட்சம் ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியம் குறைந்த பட்சமாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு பணிப்பதிவேடு மற்றும் பணிவிதிகள் ஏற்படுத்த வேண்டும்.
மாதாந்திர போக்குவரத்து பயணப்படியை அனைத்து மேற்பார்வையாளர்களுக்கும் ரூ. ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கடைகள் மூடப்பட்டதால் பணியிழந்து மன உளைச்சல் மற்றும் எதிர்கால வாழ்க்கை குறித்த காரணங்களால் தற்கொலை செய்து கொண்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் அரசுப்பணியும், இழப்பீடு தொகையும் வழங்கவேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
மேலும்> இந்த கோரிக்கைகளை வலியுறுத்த வரும் 29ம் தேதி டாஸ்மாக் கடையடைப்பு மற்றும் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிரசார செயலாளர் மதன் நன்றி கூறினார்.