Commencement of National Family Health Survey in Perambalur District

பெரம்பலூர் மாவட்டம், அயன்பேரையூரில், தேசிய குடும்ப நல சுகாதார கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டது.

மத்திய அரசின் திட்டமான தேசிய சுகாதார கணக்கு எடுக்கும் பணி அயன் பேரையூர் ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணி, துணைத் தலைவர் சுரேஷ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில், நேசனல் ஹெல்த் மிசன் மற்றும் இண்டர்நேஷ்னல் இன்ஸ்டியூட் ஆப் பாப்புலேசன் சயின்ஸ் ஆகியவற்றின் வழிகாட்டுதலின் பேரில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவ தன்னார்வ குழுவினர் அப்பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் வரதராஜன் தலைமையில் இன்று முதல் 4 நாட்கள் நடத்துகின்றனர். இதில் அக்கிராமத்தில் உள்ள 13 வீடுகளுக்கு 1 வீடு என 22 வீடுகள் மட்டும் இதில் கணக்கெடுக்கப்படும். அப்போது ஒவ்வொரு வீடுகளிலும், பொருளாதார நிலைக்கேற்ப, கழிப்பிட வசதி, சுத்தமான குடிநீர், கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள், மேலும், கால்நடை வளர்ப்பதில் சுகாதராம் மேற்கொள்கின்றனரா, 15 வயது முதல் 49 வயது வரையிலான பெண்களுக்கும், 15 முதல் 54 வயது வரையிலான ஆண்களுக்கும், அந்தந்த பருவத்தில் போடப்பட வேண்டிய தடுப்பூசிகள் மற்றும் நோய்கள் இருப்பின் அதற்கான மருந்து மாத்திரைகள் சாப்பிடுகின்றனரா என்பது குறித்தும், அதற்கான மருந்து மாத்திரைகளை எடுத்து கொள்கின்றனரா என்பதையும் கேட்கப்பட்டு பதிவு செய்யப்படும். அயோடின் உப்பை பயன்படுத்துகின்றனரா, கர்ப்பமானவர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து கொள்கின்றனரா என்ற ஆய்வும் மேற்கொள்ளப்பபடும். குடும்ப உறுப்பினர்களின் சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, ரத்த அளவு, பிற நோய்கள் இருப்பின் அதற்கான மருத்துவ முறைகள் விவரங்கள் கணக்கெடுப்பு செய்யப்படுகிறது. இதோடு எயிட்ஸ், காசநோய், டி.பி, நோய் தாக்குதல் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. இது போன்ற கணக்கெடுப்பு மூலம், தற்போது கர்ப்பிணி பெண்களுக்கு வழங்குப்படும் பேருகால நிதியுதவி 12 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் 5 ஆண்டுக்கு ஒரு இந்த ஆய்வு நடத்தப்படும், மேலும், அரசின் திட்டங்களை புதுப்பிக்கவும், சீர்திருத்தம் செய்யவும், இந்த கணக்கெடுப்பு அறிக்கைகள் உதவும் என உதவி பேராசரியர் வரதராஜன் தெரிவித்தார். இக்கணக்கெடுப்பு குழுவில், மாநில ஒருங்கிணைப்பார் செல்வராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமராஜ், குழு மேற்பார்வையாளர் அல்லாபகஷ், குழு உறுப்பினர்கள் தாமோதரன், புவனேஸ்வரி, பிரியதர்ஷினி, தமிழ்ச்செல்வி, தமிழரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!