01-election-commission-of-indiaபெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.நந்தகுமார் தெரிவித்துள்ளதாவது :

நடைபெறவுள்ள சட்ட மன்றப்பொதுத் தேர்தலில் பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்ட மன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் பொதுப் பார்வையாளராக வி.என்.விஷ்ணுவை , இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்ட மன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஏதேனும் தேர்தல் விதிமுறை மீறல் நடைபெறுவது குறித்து பொதுப் பார்வையாளரிடம் புகார் தெரிவிக்க விரும்பும் நபர்கள், 8903024617 என்ற அலைபேசி எண்ணிலோ, 04328-225007 என்ற எண்ணிற்கு தொலைபேசி வாயிலாகவோ அல்லது தொலைநகல் வாயிலாகவோ தகவல்களை தெரிவிக்கலாம்.

மேலும், பொதுப் பார்வையாளரை நேரில் சந்திக்க விரும்பும் நபர்கள் பயணியர் மாளிகைக்கு பொதுவாக மதியம் 3 மணி முதல் 5மணி வரை, அறை எண்.1-ற்கு நேரில் வந்து தங்களுடைய புகார்களை தெரிவிக்கலாம்.

கண்ணியமான, நேர்மையான தேர்தலை நடத்த பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும், என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!