Communist Party of India (CPI (M)) condemns higher fares in Perambalur municipality
பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில், பெரம்பலூர் – ஆலத்தூர் வட்ட 10 வது மாநாடு இன்று நடந்தது.
அதில் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில் பெரம்பலூர் நகராட்சியில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும், தினசரி காவிரி குடிநீர் வினியோகம் செய்யக்கோரியும், இ-சேவை மையம் முறையாக செயல்படுத்தவும், அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கவும், தலைமை மருத்துவமனையில் உள்ள சுகாதார சீர்கேட்டை சரி செய்திடவும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பெண் உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.