Community bank coordinator in Perambalur district: Interested candidates may apply

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள அறிவிப்பு :

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் செயல்படுத்தப்படும் ஆலம்பாடி, சிறுவாச்சூர், ஆலத்தூர், கொளக்காநத்தம், வேப்பந்தட்டை, எறையூர், வேப்பூர் மற்றும் அகரம்சிகூர் ஆகிய எட்டு களப்பகுதிகளில் சுய உதவிக் குழுக்கள் – வங்கிகள் இடையே இணைப்பு பணிகள் மேற்கொள்ள சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் பணிக்கு மதிப்பூதிய அடிப்படையில் தற்காலிக நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்பு அல்லது மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் பணியாளருக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.2000- (ரூபாய் இரண்டாயிரம் மட்டும்) வழங்கப்படும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க மனுதாரர்கள் அந்தந்த ஊராட்சிகளுக்குட்பட்ட ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்பு அல்லது மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும், 35-வயத்திற்குட்பட்டவராக இருக்க வேண்டும், 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், கணினி அனுபவம், தகவல் தொடர்பு திறன் மற்றும் கையெழுத்து அழகாக எழுதத் தெரிந்தவராக இருக்க வேண்டும், தொடர்புடைய ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பின் பரிந்துரையுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் திட்ட இயக்குநர், (மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,) என்ற முகவரிக்கு 10.03.2018 அன்று பிற்பகல் 05.00 மணிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவர்களுக்கு 15.03.2018 அன்று எழுத்துத் தேர்வு நடைபெறும்.
இப்பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்களது அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் 15.03.2018 அன்று பெரம்பலூர் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தில் நடைபெறவுள்ள எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!