Companies can apply for skill training of young people – Perambalur District Collector

Training and Development – Business
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :
பெரம்பலூர் மாவட்டத்தில் மகளிர் திட்டம், நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இளைஞர் திறன் வளர்த்தல் பயிற்சி நடத்துவதற்கு தகுதியுடைய நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
அதன்படி, 2017-18 ஆம் நடப்பு நிதியாண்டிற்கு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் “டேலி ஈஆர்பி 9” பயிற்சி 90 நாட்கள், 500 மணி நேர பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
மேற்கண்ட பயிற்சி வகுப்பு நடத்திட கடந்த 3 ஆண்டுகளில் அரசுத் திட்டங்களில் அளிக்கப்பட்ட பயிற்சி மற்றும் பயிற்சியாளர்கள் விபரம், வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்ட விபரம், (NCVT/SSC) என்.சி.வி.டி / எஸ்.எஸ்.சி நிறுவனங்கள் மூலம் சான்று பெற்று தருதல் உள்ளிட்ட தகுதிகளை உடைய நிறுவனங்கள் மேற்கண்ட பயிற்சி வகுப்பு நடத்திட விண்ணப்பிக்கலாம்.
மேலும், மேற்காணும் தகுதிகளையுடைய நிறுவனங்கள் தங்கள் முன்மொழிவுகளை திட்ட இயக்குநர், மகளிர் திட்ட செயலாக்க அலகு பெரம்பலூர் மாவட்டம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 12.09.2017 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், என இவ்வாறு தெரிவித்துள்ளார்.